1960-களிலேயே சில படங்களில் துணைக் கதாபாத்திரங்களில், முகம் தெரியாத கதாபாத்திரங்களில் நடித்து வந்த கவுண்டமணிக்கு பாரதிராஜா இயக்கிய 16 வயதினிலே திரைப்படம்தான் திருப்புமுனையாக அமைந்தது. அந்த படத்தில் ரஜினிகாந்த் உடன் இருந்து அவரை டிரிகர் செய்யும் கதாபாத்திரத்தில் கவுண்டமணி கலக்கியிருப்பார். படத்தில் அவர் சொல்லும் ‘பத்த வச்சிட்டியே பரட்ட்’ வசனம் இன்று வரை பிரபலமாக இருந்து வருகிறது.
16 வயதினிலே திரைப்படம் பெரிய ஹிட்டானதும் அடுத்தடுத்து அவருக்கு உடனேயே பெரிய வாய்ப்புகள் உருவாகிவிடவில்லை. கிடைத்த கதாபாத்திரங்களில் தலைகாட்டி வந்தார். 80 களுக்கு பிறகே அவர் செந்திலோடு இணைந்து தங்களுக்கென ஒரு ஸ்டைல் காமெடியை உருவாக்கினார்.

#image_title
கவுண்டமணியின் பாணியைதான் தற்போது சந்தானம் மற்றும் யோகி பாபு ஆகிய இருவருமே ஃபாலோ பண்ணி வருகின்றனர். இடையில் கவுண்டமணி சில ஆண்டுகள் அவரின் உடல் நலக்குறைவு காரணமாக சினிமாவில் இருந்து விலகியிருந்தார். ஒரு இடைவெளிக்குப் பிறகு இப்போது அவர் பழனிச்சாமி வாத்தியார் மற்றும் ஒத்த ஓட்டு முத்தையா ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.
கவுண்டமணி பொதுவாக மீடியாக்களில் தோன்றாமல் ஒதுங்கி இருப்பதால் அவரைப் பற்றி மற்றவர்கள் சொல்லும் தகவல்கள் நம் காதுகளுக்கு எட்டுகின்றன. அப்படி அவர் பற்றி பிறர் சொல்வதெல்லாம் நகைச்சுவையான சம்பவங்களும், அவர் பிறரை நக்கல் அடித்த தருணங்களையும்தான்.
ஆனால் கவுண்டமணி பற்றி பழம்பெரும் மறைந்த நடிகரான பீலி சிவம் ஒரு எமோஷனலான தருணத்தைப் பகிர்ந்துள்ளார். பீலி சிவம் கவுண்டமணியோடு நாடக மேடை காலத்திலிருந்து பழகியவர். பீலி சிவம் அளித்த பேட்டியில் “ நான் கவுண்டமணி எல்லாம் நாடகத்தில் நடிக்கும் போது ஒன்றாக இருந்தோம். கவுண்டமணி வெளியில் பார்ப்பது போல நகைச்சுவையானவர் மட்டும் இல்லை. ரொம்பவும் இரக்கக் குணம் கொண்டவர். ஒருநாள் நாங்கள் பசியில் இருந்தபோது எங்கோ சென்று திரும்பி வந்தவர் எல்லோருக்கும் சாப்பாடு வாங்கிவந்தார். சாப்பாடு எப்படி வாங்கினாய் எனக் கேட்டபோது ரத்ததானம் கொடுத்து அந்த பணத்தில் வாங்கியதாக சொன்னார்.” எனப் பகிர்ந்துள்ளார்.