Connect with us

ஆடம்பரத்தை விரும்பாத கவுண்டமணி 10 கார்கள் வைத்திருந்தது ஏன் தெரிய்மா? அதுக்கு பின்னாடி இப்படி ஒரு அவமானம் இருக்கா?

CINEMA

ஆடம்பரத்தை விரும்பாத கவுண்டமணி 10 கார்கள் வைத்திருந்தது ஏன் தெரிய்மா? அதுக்கு பின்னாடி இப்படி ஒரு அவமானம் இருக்கா?

 

தமிழ் சினிமாவில் கோலோச்சிய நகைச்சுவை நடிகர்களின் பட்டியலை போட்டால் அதில் தவிர்க்க முடியாத ஒரு இடத்தில் இருப்பார் கவுண்டமணி. 60களிலேயே சில படங்களில் துணைக் கதாபாத்திரங்களில், முகம் தெரியாத கதாபாத்திரங்களில் நடித்து வந்த கவுண்டமணிக்கு பாரதிராஜா இயக்கிய 16 வயதினிலே திரைப்படம்தான் திருப்புமுனையாக அமைந்தது. அந்த படத்தில் ரஜினிகாந்த் உடன் இருந்து அவரை டிரிகர் செய்யும் கதாபாத்திரத்தில் கவுண்டமணி கலக்கியிருப்பார். படத்தில் அவர் சொல்லும் ‘பத்த வச்சிட்டியே பரட்ட்’ வசனம் இன்று வரை பிரபலமாக இருந்து வருகிறது.

16 வயதினிலே திரைப்படம் பெரிய ஹிட்டானதும் அடுத்தடுத்து அவருக்கு உடனேயே பெரிய வாய்ப்புகள் உருவாகிவிடவில்லை. கிடைத்த கதாபாத்திரங்களில் தலைகாட்டி வந்தார். 80 களுக்கு பிறகே அவர் செந்திலோடு இணைந்து தங்களுக்கென ஒரு ஸ்டைல் காமெடியை உருவாக்கினார்.

   

அப்போது அவர் ஷூட்டிங் முடிந்து கிளம்பும்போது கூட்டத்தோடு கூட்டமாக கிடைக்கும் வண்டிகளில் அனுப்புவார்களாம். முக்கிய நடிகர்களுக்கு மட்டுமே தனிக்கார் கொடுப்பார்கள். ஏன் இப்படி பாகுபாடு காட்டுகிறார்கள் என்ற வருத்தத்தில் பல நாட்கள் நடந்தே சென்றுவிடுவாராம்.

அப்படி ஒருநாள் அவர் நடந்து செல்வதைப் பார்த்த ரஜினி அழைத்து ஏன் நடந்து செல்கிறீர்கள் எனக் கேட்டுள்ளார். அப்போது அவர் தன் மனக்குமுறலை ரஜினியிடம் சொல்ல “விடுங்க, நீங்க சீக்கிரமே பெரிய ஆளாகி நிறை கார் வாங்குவீங்க. வாரத்துல 7 நாளும் 7 வெவ்வேறு கார்ல ஷூட்டிங் போவீங்க” என ஆறுதல் சொன்னாராம்.

ரஜினி சொன்னது போலவே நடந்தது. கவுண்டமணி அதன் பின்னர் காமெடி சூப்பர் ஸ்டார் ஆனார். ஹீரோக்களுக்கு இணையாக சம்பளம் வாங்கினார். 7 கார் இல்லை, 10 கார்கள் வாங்கி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு காரில் ஷூட்டிங் வந்து இறங்கினார். ஆடம்பரங்களை விரும்பாத கவுண்டமணி இந்த ஒரு விஷயத்தில் மட்டும் பிடிவாதமாக இருந்தாராம்.

Continue Reading
To Top