ரியல் டிஷோவுக்கு பேர் போன சேனல் விஜய் டிவி தான். இவர்கள் நடத்தும் பொழுதுபோக்கு நிகழ்ச்சி, கலை நிகழ்ச்சி போன்ற பல விஷயங்களுக்காக பல ரசிகர் கூட்டங்களை தக்க வைத்துள்ளது. இதில் முக்கியமாக சொல்லப்போனால் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர்களுக்கு மாபெரும் ரசிகர் கூட்டமே இருந்து வருகிறது. இவர்களின் சிறப்பான தொகுப்பின் மூலமும் சிறந்த சிந்தனையின் மூலம் கையாளுவிதமாகவும் பல ரசிகர்களை வளைத்துப் போட்டு வைத்திருக்கிறார்கள்.
சிந்திக்க வைக்க கூடிய காமெடி மூலமாக வெளிப்படுத்தும் பல உணர்வு பூர்வ நகைச்சுவைகளை அல்லி கொடுப்பதில் விஜய் டிவியின் தொகுப்பாளர்களுக்கே சேரும். அதில் பிரியங்கா, மாகாபா, டிடி, பாவனா, கோபிநாத் போன்றவள் அடங்கும். ஆனால் சில காலமாகவே விஜய் டிவியில் இருந்து தொகுப்பாளர்கள் வரிசையாக ஒவ்வொருவராக வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள். அதில் முதலில் டிடி அவர்களுக்கு கால்களில் பிரச்சனை உள்ளதால் நீண்ட நேரம் நின்று தொகுக்க முடியாது என்பதற்காக வெளியேறினார்.
அதன் பின்னதாக பாவன அவர்கள் சரியான அமைப்பு இல்லாததால் விஜய் டிவியில் இருந்து வெளியேறி முழு நேர கிரிக்கெட் தொகுப்பாளராக மாறிவிட்டார். இதற்கு அடுத்ததாக குக் வித் கோமாளிலிருந்து பிரபல தொகுப்பாளராக இருந்தவர்கள் தான் செஃப் வெங்கடேஷ் பட் அவர்களும் வெளியேறி விட்டார். அதைத் தொடர்ந்து தாமு அவர்களும் வெளியேறுகிறார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. தற்போது இதைவிட மாபெரும் அதிர்ச்சி என்னவென்றால், நீயா நானா வை தொகுத்து வழங்கும் கோபிநாத் அவர்களும் இதிலிருந்து வெளியேறுகிறார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.
அதாவது மார்ச் 29ஆம் தேதி நடக்கவிருக்கும் IPL மேட்சை எடுத்து நடத்துவதற்காக நீயா நானா நிகழ்ச்சியை மொத்தமாக கைவிட்டுட்டு முழு நேர கிரிக்கெட் தொகுப்பாளராக மாற உள்ளார் என்று தகவல் கசிந்துள்ளது. ஆனால், தற்போது கோபிநாத் அவர்கள் நான் கிரிக்கெட் தொகுத்து வழங்கப் போவது உண்மைதான், ஆனால் விஜய் டிவியில் இருந்து நான் விலகப் போவதும் இல்லை, நீயா நானா நிகழ்ச்சியை நடத்தாமல் இருக்க போவதுமில்லை என்று தெரிவித்திருக்கிறார்.