Connect with us

“G25gle”..! இன்றைய Google Logo ஏன் இப்படி இருக்கு தெரியுமா..? அட இது தெரியாம போச்சே..!!

TRENDING

“G25gle”..! இன்றைய Google Logo ஏன் இப்படி இருக்கு தெரியுமா..? அட இது தெரியாம போச்சே..!!

 

மாடர்ன் உலகில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை செல்போனில் நேரத்தை செலவிடுகின்றனர். இன்றைய தொழில்நுட்பங்கள் நாம் எண்ணி பார்க்க முடியாத அளவிற்கு வளர்ந்து விட்டது. கையில் ஒரு செல்போன் இருந்தாலே போதும் என்கிற அளவிற்கு ஆகிவிட்டது. அதிலும் முக்கியமாக நாம் கூகுளின் உதவியுடன் எந்த ஒரு விஷயத்தையும் தெரிந்து கொள்ளலாம். இன்று Google என்பதற்கு பதிலாக G25gle என இருப்பதை நீங்கள் கவனித்தீர்களா?

   

 

கூகுள் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக 1998-ஆம் ஆண்டு செப்டம்பர் 27-ல் தொடங்கப்பட்டது. இன்று கூகுள் தனது 25 வது பிறந்தநாளை சிறப்பு Doodle உடன் கொண்டாடுகிறது. அதனால் தான் இன்றைய Google Doodle ஆனது GIF உடன் வருகிறது. கூகுளின் 25 ஆவது பிறந்த நாளை குறிக்கும் விதமாக G25gle என மாறுகிறது . 1990-களில் ஸ்டார் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தின் கணினி அறிவியல் திட்ட முனைவர் பட்ட மாணவர்களான செர்ஜி பிரின், லாரி பேஜ் ஆகியோர் கூகுளை நிறுவியுள்ளனர்.

இருவரும் சிறந்த தேடுதலுக்கான முன்மாதிரியை உருவாக்க அயராது உழைத்தனர். அதன் பலனாக கடந்த 1998-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27-ஆம் தேதி Google Inc அதிகாரப்பூர்வமாக நிறுவப்பட்டது. உலகின் தகவல்களை ஒழுங்கமைத்து அனைவரும் தெரிந்து கொள்ளும் விதமாக பயனுள்ளதாக கூகுள் மாற்றுகிறது. கூகுளின் தற்போதைய CEO சுந்தர் பிச்சை கூகுளில் வெற்றிக்கு ஒரு பகுதியாக இருக்கும் பயனர்கள், ஊழியர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

 

author avatar
Priya Ram
Continue Reading
To Top