‘ குட் நைட் ‘ திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் மணிகண்டன். இவர் நடிகராக மட்டுமின்றி எழுத்தாளர், மிமிக்ரி கலைஞர் எனப் பல பன்முகங்களை கொண்டவர். தனது திரைப்பயணத்தை குணசித்திர கதாபாத்திரங்களில் தொடங்கி , ‘ஜெய் பீம்’ படத்தில் முக்கியமான ரோலில் நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இவர் நடிப்பில் வெளிவந்த ‘ குட் நைட் ‘ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இத்திரைப்படத்தில் மீதா ரகுநாத் ரமேஷ் திலக், பகவதி பெருமாள், பாலாஜி சக்திவேல் என பல பிரபலங்கள் நடித்திருந்தனர். சிறிய பட்ஜெட்டில் உருவான இப்படம் 10 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இந்த வருடம் வெளியான சிறிய பட்ஜெட் படங்களில் மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்ற திரைப்படங்களில் இதுவும் ஒன்று.

இப்படத்தை தொடர்ந்து இவர் நக்கலைட்ஸ் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கும் படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். இத்திரைப்படம் காமெடி கலந்த குடும்ப பின்னணியில் உருவாக்குவதாக படக்குழு கூறியுள்ளது. ஒரு சாதாரண நடுத்தர குடும்பத்தை இளைஞன் தன்மானத்திற்காகவும், தன் குடும்பத்தின் நலனுக்காகவும் எதிர்கொள்ளும் சவால்களும் சாகசங்களுமே திரைப்படத்தின் மையக்கரு என்று கூறியுள்ளனர்.

#image_title
இதில் மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் குரு சோமசுந்திரம் மற்றும் சான்வே மேகனா ஆகியோர் நடிக்கிறார்கள். தற்போது இந்த படத்தின் முதற்கட்ட ஷூட்டிங் கோயம்புத்தூரில் நடந்து வருவதாக கூறப்படுகிறது. இத்திரைப்படத்தின் மூலம் மணிகண்டன் மற்றுமொரு வெற்றிக்கனியை சுவைப்பாரா? என்பதை நாம் பொறுத்திருந்து பார்க்கலாம்.
