Connect with us

‘குட் நைட்’ மணிகண்டனுடன் இருக்கும் இவர் அவரின் காதலியா..? இணையத்தில் வைரலாகும் வீடியோ.. ஷாக்கில் ரசிகர்கள்…

CINEMA

‘குட் நைட்’ மணிகண்டனுடன் இருக்கும் இவர் அவரின் காதலியா..? இணையத்தில் வைரலாகும் வீடியோ.. ஷாக்கில் ரசிகர்கள்…

 

‘ குட் நைட் ‘ திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் மணிகண்டன்.  இவர் நடிகராக மட்டுமின்றி எழுத்தாளர், மிமிக்ரி கலைஞர் எனப் பல பன்முகங்களை கொண்டவர். தனது திரைப்பயணத்தை குணசித்திர கதாபாத்திரங்களில் தொடங்கி , ‘ஜெய் பீம்’ படத்தில் முக்கியமான ரோலில் நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இவர் நடிப்பில்  வெளிவந்த ‘ குட் நைட் ‘ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

   

இத்திரைப்படத்தில்  மீதா ரகுநாத் ரமேஷ் திலக், பகவதி பெருமாள், பாலாஜி சக்திவேல் என பல பிரபலங்கள் நடித்திருந்தனர். சிறிய பட்ஜெட்டில் உருவான இப்படம் 10 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இந்த வருடம் வெளியான சிறிய பட்ஜெட் படங்களில் மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்ற திரைப்படங்களில் இதுவும் ஒன்று. இப்படத்தை தொடர்ந்து இவர் நக்கலைட்ஸ் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கும் படத்தில் ஹீரோவாக கமிட்டாகியுள்ளார். இத்திரைப்படத்தின் ஷூட்டிங்கும் தற்பொழுது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சமீபத்தில் குட் நைட் படத்தின் ஹீரோயின் மீதா ரகுநாத்திற்கு நிச்சயம் முடிந்தது. இந்நிலையில் மணிகண்டன் தற்போது ‘என் உயிரை கொல்லும் தேன்சுடரே!’ என குறிப்பிட்டு தற்பொழுது தனது X தள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.  திவ்யா என்ற பெயரை குறிப்பிட்டு என்னை காதலிப்பது உண்மையா? என்று மணிகண்டன் கேட்க, அந்த பெண்ணும் ‘ஆமாம்’ என்று கூறுகிறார். இதைப்பார்த்த ரசிகர்கள் ‘மணிகண்டனின் காதலி இவர்தான்’ என தவறாக நினைத்து வீடியோவை வைரலாக்க தொடங்கி விட்டனர்.

ஆனால் இந்த வீடியோவில் வருபவர் அவரது உண்மையான காதலி கிடையாதாம். திவ்யா என்பவர் மணிகண்டன் அடுத்து நடிக்கும் ‘லவ்வர்’ எனும் படத்தின் ஹீரோயினாம். இத்திரைப்படத்தினை இயக்குனர் பிரபுராம் இயக்க உள்ளார். மேலும் படத்தின் டீசர் விரைவில் வெளி வர உள்ள நிலையில் மணிகண்டன் இந்த வீடியோவை தற்பொழுது தனது X தள பக்கத்தில் பதிவு செய்து டிரெண்ட் செய்துள்ளார். இதோ அந்த வீடியோ…

Continue Reading
To Top