புதுச்சேரி மாநிலத்தில் தற்போது மஞ்சள் ரேஷன் கார்டுகளுக்கு 10 கிலோவும், சிவப்பு ரேஷன் கார்டுகளுக்கு 20 கிலோவும் இலவச அரிசி வழங்கப்பட்டு வருகின்றது. கடந்த காங்கிரஸ் ஆட்சி காலத்தில் அரிசிக்கு பதிலாக பயனாளிகளின் வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டது. கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது மக்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று முதல்வர் ரங்கசாமி மீண்டும் இலவச அரிசி திட்டத்தை ஜனவரி மாதம் முதல் அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் செயல்படுத்தினார். இப்படியான நிலையில் அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் மாதம் தோறும் தலா இரண்டு கிலோ கோதுமை வழங்கப்படும் என்று அவர் அறிவித்திருந்தார்.
அதன்படி இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை தொடங்கிய பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ரங்கசாமி, சட்டசபையில் அறிவித்தபடி மஞ்சள் ரேஷன் கார்டுகளுக்கு 10 கிலோ அரிசியும், சிவப்பு ரேஷன் கார்டுகளுக்கு 20 கிலோ அரிசியும் தொடர்ந்து வழங்கப்படும். அத்துடன் இரண்டு கிலோ கோதுமையும் கூடுதலாக வழங்கப்படும். ஜன 3 ஆம் தேதி முதல் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கோடை வெயில் சுட்டெரிக்கும் இந்த வேளையில், உடல் நலனைப் பேணுவது மிகவும் அவசியமான ஒன்று. வெப்ப அலைகளின் தாக்கத்திலிருந்து…
ஈரானுடனான அமைதிப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அந்நாட்டின் மீதான அழுத்தத்தை அதிகரிக்கும் நோக்கில் அமெரிக்கா தனது கடற்படை பலத்தை அரபிக்கடலில்…
இன்றைய காலகட்டத்தில் பள்ளிச் சேர்க்கை முதல் அரசு நலத்திட்டங்கள் வரை அனைத்திற்கும் ஆதார் கார்டு மிக முக்கியமான ஆவணமாக உள்ளது.…
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், தற்போது கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தவெக வேட்பாளராகக் களம்…
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் தற்போதே அனல் பறக்கத் தொடங்கியுள்ள நிலையில், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் (EPS),…
தமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் தற்போது மீண்டும் சீராகத் தொடங்கியுள்ளது பொதுமக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக முன்பதிவு செய்த…