8ஆவது, ஊதிய குழுவின் அறிவுப்புகளுக்காக, மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள் காத்திருக்கிறார்கள். அடுத்து சில வாரங்களில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கலாம். ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாத தொடக்கத்தில், இக்குழுவிற்கு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமிக்கப்படுவார்கள் என கருதப்படுகிறது. விரைவில் விதிமுறைகள் இறுதி செய்யப்படும் என நம்பப்படுகிறது. ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதிய உயர்வு, ஃபிட்மெண்ட் ஃபாக்டரின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும். ஃபிட்மெண்ட் ஃபாக்டரின் 1.92 முதல் 3.0 அல்லது அதற்கு மேல் இருக்கக்கூடும்.
ஃபிட்மெண்ட் ஃபாக்டரின் அடிப்படையில் ஊதியமாக ரூ. 30,000 பெரும் ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதிய உயர்வு எவ்வளவு இருக்கும் என இங்கே காண்போம்.
- 1.92 ஃபிட்மென்ட் ஃபாக்டர் – ரூ.57,600
- 2.08 ஃபிட்மென்ட் ஃபாக்டர் – ரூ.62,400
- 2.28 ஃபிட்மென்ட் ஃபாக்டர் – ரூ.68,400
- 2.57 ஃபிட்மென்ட் ஃபாக்டர் – ரூ.77,100
- 3.00 ஃபிட்மென்ட் ஃபாக்டர் – ரூ.90,000
மத்திய அரசு ஓய்வூழியர்களுக்கு, ஓய்வூதியத்தின் ஒரு பகுதி மொத்தமாக பெற்றுக்கொள்ளும் வசதி கிடைக்கிறது. இது மாற்றப்பட்ட ஓய்வூதியம், கம்யுடேஷன் ஆஃப் பென்ஷன் என அழைக்கப்படுகிறது. இதற்கு ஈடாக மாதம் ஓய்வூதியத்தில் இருந்து, சிறிது சிறிதாக தொகை கழிக்கப்படும். 15 வருட காலத்தில் அந்த தொகை கழிக்கப்படுகிறது.
நீண்ட நாட்களாக ஓய்வூதிய மீட்பு காலத்தை, 15 ஆண்டுகளில் இருந்து 12 ஆண்டுகளாக குறைக்க வேண்டும் என ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. இது நடந்தால் ஓய்வுதாரர்களின் 3 ஆண்டுகள் முன்னதாகவே முழு ஓய்வூதியத்தையும் பெறுவர். மூத்த ஓய்வூதியதாரர்களுக்கு 80 வயது முதல் கூடுதல் ஓய்வூதியம் அளிக்கப்படுகிறது. கூடுதல் ஓய்வூதியத்திற்கான கட்டமைப்பு,
- 80 வயதில் 20% கூடுதல் ஓய்வூதியம்
- 85 வயதில் 30% கூடுதல் ஓய்வூதியம்
- 90 வயதில் 40% கூடுதல் ஓய்வூதியம்
- 95 வயதில் 50% கூடுதல் ஓய்வூதியம்
- 100 வயதில் 100% கூடுதல் ஓய்வூதியம்
கூடுதல் ஓய்வூதியம் தொடக்க வயது 65 ஆக குறைக்க வேண்டும் மற்றும் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை 5% அதிகரிப்பு தர வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். 65 வயதில் 5% கூடுதல் ஓய்வூதியம், 70 வயதில் 10% கூடுதல் ஓய்வூதியம், 80 வயதுக்கு பிறகு வழக்கமான கூடுதல் ஓய்வூதிய விதிகள் தொடரும். பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும் என ஓய்வூதியதாரர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.
