மத்திய அரசு ஊழியர்களின் நீண்ட கால எதிர்பார்ப்பான எட்டாவது ஊதியக்குழு அமைப்பதற்கான பணிகள் அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது. தற்போதைய ஏழாவது ஊதிய குழுவின் 10 ஆண்டுகால அவகாசம் வருகின்ற டிசம்பர் 31ஆம் தேதி உடன் முடிவடைகிறது. இதன் தொடர்ச்சியாக புதிய ஊதிய குழுவிற்கான பணிக்கான விதிமுறைகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததுடன் அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை மத்திய நிதியமைச்சர் கம் வெளியிட்டது. இந்த புதிய குழு தன்னுடைய ஆய்வுகளை மேற்கொண்டு சம்பளம், படிகள் மற்றும் ஓய்வூதியம் தொடர்பான பரிந்துரைகள் வழங்க 18 மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
புதிய ஊதிய கட்டமைப்பு அமலுக்கு வரும் தேதியை பொறுத்தவரை முந்தைய நடைமுறைகளின் படி 2026 ஜனவரி 1 முதல் இது நடைமுறைக்கு வந்ததாக கருதப்படும். குழுவின் பரிந்துரைகளை அரசு ஏற்றுக்கொண்ட பின்னர் ஊழியர்களுக்கு கூடுதல் சம்பளம் கிடைக்கும் என்றாலும் 2026 ஜனவரி மாதம் முதலே கணக்கிடப்பட்டு அந்த நிலுவைத் தொகை வழங்கப்படும். இந்த மாற்றத்தின் மூலம் குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் தற்போதைக்கு 18,000 ரூபாயிலிருந்து 21,600 முதல் 26 ஆயிரம் ரூபாய் வரை உயர வாய்ப்புள்ளது.
மதுரை மத்திய தொகுதியில் அதிமுக கூட்டணியின் வேட்பாளராக இயக்குநர் சுந்தர்.சி களமிறங்கியுள்ள நிலையில், அவரை எதிர்த்து நடிகர் பிரகாஷ் ராஜ்…
அரசியல் மேடைகளில் மொழிபெயர்ப்பு என்பது ஒரு கலை, ஆனால் அது சில நேரங்களில் விபத்தாக முடிந்துவிடுவதுண்டு. முன்னொரு காலத்தில் ராகுல்…
தமிழக அரசியலிலும் திரையுலகிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நடிகர் மற்றும் தவெக தலைவர் விஜய்யின் விவாகரத்து விவகாரம், தற்போது இறுதிக்கட்டத்தை…
சூரஜ் மற்றும் கோமல் ஆகிய இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, மகிழ்ச்சியாக இருந்த நிலையில், யாரோ ஒரு நபர் அனுப்பிய ஒரு…
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், தலைநகர் சென்னை மக்களுக்காக 'சென்னை சூப்பர்-6' என்ற அதிரடி தேர்தல் வாக்குறுதிகளை திமுக…
இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் தயாரிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் 'தாய்…