ஐயோ கொடுமையே… நகைக் கடையில் பட்டப்பகலில் 1.5 லட்சம் மதிப்புள்ள தங்கம் அபேஸ்… CCTV -யில் சிக்கிய மர்ம நபர்… பெங்களூருவை உலுக்கிய அதிர்ச்சி சம்பவம்…!!

By Swetha on ஐப்பசி 24, 2026

Spread the love

பெங்களூருவின் பின்னிப்பேட்டை பகுதியில் உள்ள ராஜராஜேஸ்வரி ஜுவ்கல்ஸ் நகைக்கடையில் சுமார் 10 கிராம் எடையுள்ள 1.5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கம் திருடப்பட்டுள்ளது. வியாழக்கிழமை மதியம் 12:30 மணியளவில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடை உரிமையாளரின் கவனத்தை திசைதிருப்பிய மர்ம நபர், அவர் வேறு வேலையில் மும்முரமாக இருந்ததை சாதகமாகப் பயன்படுத்தி நகையுடன் தப்பியோடியுள்ளார். கடையில் இருந்த சிசிடிவி கேமராவில் இந்தத் திருட்டுத் துல்லியமாக பதிவாகியுள்ளது.

   

https://twitter.com/CNNnews18/status/2113575953146536443/video/1

   

சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தப்பியோடிய நபர் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் நகைக் கடையில் நடந்த இந்தத் துணிகர திருட்டுச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.