சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாகக் குறைந்து சவரனுக்கு 800 ரூபாய் சரிவைச் சந்தித்துள்ளது. இதன் மூலம் ஒரு சவரன் தங்கம் 1,19,600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்த தங்கம் விலை, இன்று குறைந்துள்ளதால் நகை வாங்குவோர் மத்தியில் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேசச் சந்தையில் நிலவும் பொருளாதார மாற்றங்கள் மற்றும் முதலீட்டாளர்களின் போக்கினால் இந்த விலை சரிவு ஏற்பட்டுள்ளதாகப் பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஒரு கிராம் தங்கம் 100 ரூபாய் குறைந்து 14,950 ரூபாய்க்கு விற்பனையாவதால், வரும் நாட்களில் விலை மேலும் குறையுமா என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடையே அதிகரித்துள்ளது.
