BIG BREAKING: “நேற்று 800, இன்று 800″… சவரன் ரூ.1.11 லட்சத்தை தாண்டியது… மீண்டும் உச்சம் தொட்ட தங்கம் விலை…!

By Nanthini on சித்திரை 4, 2026

Spread the love

தங்கம் விலை கடந்த இரண்டு நாட்களாக விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்து வருவது நகைப்பிரியர்கள் மற்றும் இல்லத்தரசிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று சவரனுக்கு 800 ரூபாய் அதிகரித்த நிலையில், இன்றும் அதே போல 800 ரூபாய் உயர்ந்து, மொத்தம் இரண்டே நாட்களில் 1,600 ரூபாய் அதிகரித்துள்ளது சாமானியர்களுக்கு பேரிடியாக அமைந்துள்ளது.

இதன் விளைவாக, சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 13,950 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,11,600 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச பொருளாதார சூழல் மற்றும் பங்குச்சந்தை மாற்றங்கள் இந்த அதிரடி விலை உயர்வுக்கு முக்கிய காரணமாகக் கருதப்பட்டாலும், மங்களகரமான விசேஷங்களுக்கு தங்கம் வாங்கத் திட்டமிட்டிருப்பவர்கள் இந்த விலை ஏற்றத்தைக் கண்டு மிகுந்த கவலையில் உள்ளனர்.