BREAKING: மீண்டும் உச்சம் தொட்ட தங்கம் விலை…. ஒரே நாளில் ரூ.1,280 உயர்வு…. நகைப்பிரியர்களுக்கு வேட்டு வைத்த வேலண்டைன்ஸ் டே….!

By Nanthini on மாசி 14, 2026

Spread the love

தங்கம் விலை கடந்த இரண்டு நாட்களாகக் கணிசமாகக் குறைந்து வந்த நிலையில், காதலர் தினமான இன்று (பிப். 14) திடீரென மீண்டும் அதிரடியாக உயரத் தொடங்கியிருப்பது நகைப் பிரியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று ஒரே நாளில் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.160 உயர்ந்து ரூ.14,560-க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.1,280 அதிகரித்து ரூ.1,16,480-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த இரண்டு நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.3,120 வரை குறைந்திருந்த தங்கம், தற்போது சர்வதேச சந்தையில் நிலவும் விலை ஏற்றத்தின் காரணமாக மீண்டும் ஏறுமுகத்தில் பயணிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, காதலர் தினக் கொண்டாட்டங்கள் மற்றும் திருமண சீசன் நேரங்களில் இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளதால், வரும் நாட்களில் தங்கம் விலை மேலும் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.