சர்வதேசச் சந்தையில் நேற்று தங்கம் மற்றும் வெள்ளியின் விலை அதிரடியாகச் சரிந்தது, உலகளாவிய முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ‘COMEX’ வர்த்தகத்தில் தங்கம் 2.47 சதவீதம் குறைந்து, ஒரு அவுன்ஸ் 4,500 டாலருக்கும் கீழ் (4,492 டாலர்) சரிந்துள்ளது. இது 1983-ம் ஆண்டிற்குப் பிறகு தங்கம் சந்தித்துள்ள மிகப்பெரிய வாராந்திர வீழ்ச்சியாகக் கருதப்படுகிறது. அமெரிக்க டாலரின் மதிப்பு தொடர்ந்து வலுவடைந்து வருவதும், பணவீக்கக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வு குறித்த கவலைகளுமே இந்தத் திடீர் வீழ்ச்சிக்கு முக்கியக் காரணங்களாகப் பார்க்கப்படுகின்றன.
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றங்கள் பொதுவாகத் தங்கத்தின் விலையை உயர்த்தும் எனக் கருதப்பட்டாலும், தற்போது அதற்கு நேர்மாறான சூழல் நிலவுகிறது. பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படும் தங்கம் மற்றும் இதர கமாடிட்டிகளுக்கான மவுசு தற்காலிகமாகக் குறைந்துள்ளதாகப் பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர். வெள்ளியின் விலையும் ஒரே நாளில் 5 சதவீதம் சரிந்து, ஒரு அவுன்ஸ் 70 டாலருக்கும் கீழ் சென்றுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு 119 டாலர் என்ற உச்சத்தைத் தொட்ட வெள்ளி, தற்போது மிகப்பெரிய சரிவைச் சந்தித்துள்ளது சிறிய முதலீட்டாளர்களைப் பீதியில் ஆழ்த்தியுள்ளது.
இந்தச் சரிவு 1983-ம் ஆண்டு நடந்த வரலாற்றுச் சம்பவத்தை நினைவுபடுத்துகிறது. அன்று அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டி விகிதங்களை அதிரடியாக உயர்த்தியதால், தங்கத்தின் ‘பபுள்’ (Bubble) உடைந்து விலை 20 சதவீதம் வரை சரிந்தது. தற்போதும் அமெரிக்காவின் வட்டி விகிதக் கொள்கைகள் மற்றும் வலுவான டாலர் மதிப்பு ஆகியவை தங்கத்தின் மீதான கவர்ச்சியைக் குறைத்து வருகின்றன. இந்தியாவில் இன்று சந்தை விடுமுறை என்பதால், ஆபரணத் தங்கம் 22 காரட் 10 கிராம் ரூ.1,36,540 என்ற அளவில் நிலைபெற்றுள்ளது. திங்கட்கிழமை சந்தை மீண்டும் துவங்கும்போது சர்வதேச மாற்றங்கள் உள்நாட்டு விலையில் எதிரொலிக்கும்.
வரும் வாரங்களில் தங்கம் விலை மேலும் ஒரு நிலையற்ற தன்மையிலேயே (Volatility) இருக்கும் என நிபுணர்கள் கணிக்கின்றனர். அமெரிக்கப் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் டாலரின் ஏற்றம் விலையை இன்னும் சற்றே குறைக்க வாய்ப்புள்ளது. இருப்பினும், சர்வதேச அரசியல் சூழல்கள் மேலும் மோசமடைந்தால், முதலீட்டாளர்கள் மீண்டும் தங்கத்தை நோக்கித் திரும்பக்கூடும். எனவே, குறுகிய காலத்தில் இந்த வீழ்ச்சி நீடித்தாலும், நீண்ட கால அடிப்படையில் தங்கம் மீண்டும் ஒரு வலுவான மீட்சியைச் சந்திக்கும் என்றே பொருளாதார ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக ‘ஜனநாயகன்’ திரைப்படத் தயாரிப்பாளர் வெங்கட் நாராயணா நியமனம் செய்யப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும்…
தமிழ்நாட்டில் அண்மையில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் தனிப்பெரும்பான்மை பெறாவிட்டாலும், தனிப்பெருங்கட்சியாக உருவெடுத்து நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்…
தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு மாநில அரசியல் களம் தினமும் ஒரு பரபரப்புடன் நகர்ந்து கொண்டிருக்கிறது. தேர்தலுக்கு முன்பு…
கரூர் மரணங்கள் தொடர்பாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசிய சர்ச்சைக்குரிய கருத்துகளுக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தை நாட திமுக தலைமை…
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின் கீழ்…
பெங்களூருவில் மாடலிங் கனவோடு இருந்த கல்லூரி மாணவிக்கு நேர்ந்த இணையவழி கொடூரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாடலிங் துறையில் சாதிக்க வேண்டும்…