FLASH: 2 நாளில் ரூ.1,360 உயர்ந்த தங்கம் விலை… ஒரு சவரன் எவ்ளோ தெரியுமா…? அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்…!!

By Devi Ramu on ஐப்பசி 10, 2026

Spread the love

சென்னையில் தங்கம் விலை கடந்த இரண்டு நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.1,360 வரை உயர்ந்து சாமானிய மற்றும் நடுத்தர மக்களுக்குப் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.65 உயர்ந்து ரூ.13,880-க்கும், ஒரு சவரன் ரூ.1,11,040-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சர்வதேசச் சந்தையில் நிலவும் பொருளாதார மாற்றங்கள் மற்றும் தேவைகள் அதிகரிப்பு காரணமாகத் தங்கத்தின் விலை மேலும் உயரக்கூடும் என சந்தை வல்லுநர்கள் கணித்துள்ளனர். அதேவேளையில், வெள்ளி விலையில் எவ்வித மாற்றமுமின்றி ஒரு கிராம் ரூ.245-க்கு விற்பனையாகி வருகிறது. பண்டிகை மற்றும் திருமணக் காலம் நெருங்கும் வேளையில் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது பொதுமக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.