சர்வதேச சந்தையில் நிலவி வரும் தீவிர போர் பதற்றத்தின் எதிரொலியாக, தங்கம் மற்றும் வெள்ளி விலையில் அதிரடியான வீழ்ச்சி ஏற்பட்டு பொதுமக்களுக்கு இன்ப அதிர்ச்சியை அளித்துள்ளது. இன்று காலையில் சவரனுக்கு ரூ.560 குறைந்த நிலையில், மாலையில் மேலும் ரூ.1,040 சரிவடைந்து, ஒட்டுமொத்தமாக தங்கம் விலை கடும் வீழ்ச்சியைக் கண்டுள்ளது.
இந்த அதிரடி மாற்றத்தால், தற்போது சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.13,200-க்கும், ஒரு சவரன் ரூ.1,05,600-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கத்தைத் தொடர்ந்து வெள்ளியின் விலையும் கணிசமாகக் குறைந்து, ஒரு கிராம் வெள்ளி ₹245-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,45,000-க்கும் விற்பனையாவதால், நகைப்பிரியர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் மத்தியில் இந்த விலை வீழ்ச்சி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
