போடு செம…! 3 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,320 குறைவு… குஷியில் இல்லத்தரசிகள்…!!

By Devi Ramu on ஐப்பசி 14, 2026

Spread the love

சென்னையில் தங்கம் விலை இன்று அதிரடியாகக் குறைந்துள்ள செய்தி பொதுமக்கள் மற்றும் நகைப்பிரியர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.95 குறைந்து ரூ.13,590-க்கும், ஒரு சவரன் ரூ.760 குறைந்து ரூ.1,08,720-க்கும் இன்றைய சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதேவேளையில், வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.245-க்கு விற்பனையாகிறது. கடந்த 3 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,320 வரை சரிந்துள்ளதால், நகை வாங்கத் திட்டமிட்டிருந்த இல்லத்தரசிகள் மற்றும் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். இந்தத் திடீர் விலை குறைவு குறித்த தகவல்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பகிரப்பட்டு வருகின்றன.