சர்வதேச பொருளாதார சூழலில் நிலவும் மாற்றங்களால் கடந்த சில நாட்களாக வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டு வந்த தங்கம் மற்றும் வெள்ளியின் விலை, இன்று அதிரடியாகக் குறைந்துள்ளது. சென்னையில் இன்று காலை ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.265 குறைந்து ரூ.15,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் சவரனுக்கு ரூ.2,120 சரிந்து, ஒரு சவரன் ரூ.1,21,600 என்ற நிலையை எட்டியுள்ளது. தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வந்த நிலையில், இந்த திடீர் சரிவு நகைப்பிரியர்களிடையே பெரும் நிம்மதியையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
வெள்ளி விலையிலும் இன்று மிகப்பெரிய சரிவு காணப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.20 குறைந்து ரூ.295-க்கு விற்பனையாவதால், கிலோவுக்கு ரூ.20,000 வரை சரிந்து ஒரு கிலோ வெள்ளி ரூ.2.95 லட்சத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது. ரஷ்யா-உக்ரைன் மோதல் மற்றும் சர்வதேச சந்தை நிலவரங்களால் தங்கம் சாமானியர்களுக்கு எட்டாக்கனியாக மாறி வரும் சூழலில், இன்றைய விலைகுறைவு நகை வாங்குவோருக்கு ஒரு நல்வாய்ப்பாக அமைந்துள்ளது.
