தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ7,000 வரை குறைந்துள்ளதால் நகை பிரியர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த 6 நாட்களில் மட்டும் ஒரு கிராமுக்கு ரூ.470 வரை விலை குறைந்துள்ளது. திங்கட்கிழமை அன்று தங்கத்தின் விலை ஏறுமுகமாக இருந்த நிலையில், தற்போது இந்த விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
இந்த மாதத் தொடக்கத்தில் ஒரு சவரன் தங்கம் ரூ1,16,000-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று அதன் விலை ரூ1,08,800 ஆகக் குறைந்துள்ளது. இதன் மூலம் இந்த மாதத்தில் மட்டும் சவரனுக்கு ரூ7,200 வரை விலை குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தங்கத்தின் இந்த விலை வீழ்ச்சி நிலை இன்னும் சில நாட்களுக்குத் தொடர வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
