BREAKING NEWS:”தொடர்ந்து சரிந்து வரும் தங்கம் விலை… சவரனுக்கு ரூ.560 குறைந்தது தங்கம்… “நகைப் பிரியர்களுக்கு ஜாக்பாட்”…!

By Visaka on ஆடி 8, 2026

Spread the love

தங்கப் பிரியர்களுக்கு பெரும் மகிழ்ச்சியூட்டும் வகையில், கடந்த மூன்று நாட்களாக தங்கம் விலை அதிரடியாகக் குறைந்து வருகிறது. இன்று (ஜூலை 8) ஒரே நாளில் மட்டும் 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ₹560 குறைந்து ரூ 1,06,640-க்கும், ஒரு கிராம் தங்கம் ரூ 70 குறைந்து ரூ 13,330-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த மூன்று நாட்களில் மட்டும் சவரனுக்கு மொத்தம் ரூ 2,960 வரை விலை சரிந்துள்ளதால், நகை வாங்கக் காத்திருந்த பொதுமக்கள் மற்றும் நடுத்தர குடும்பத்தினர் மிகுந்த உற்சாகமடைந்துள்ளனர்.