தங்கம் விலை கடந்த சில நாட்களாக மளமளவென சரிந்து வந்த நிலையில், கடந்த 24-ந்தேதி முதல் மீண்டும் ஏற்றம் கண்டு வந்தது. அந்த வகையில் கடந்த புதன்கிழமை அன்று சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.13,195-க்கும், ஒரு சவரன் ரூ.1,05,560-க்கும் விற்பனை செய்யப்பட்டு உச்சத்தில் இருந்தது.
இந்த நிலையில், இன்று தங்கம் விலையில் அதிரடியான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. அதன்படி, ஒரு கிராமுக்கு ரூ.155 குறைந்து ரூ.13,040-க்கும், சவரனுக்கு ரூ.1,240 குறைந்து ஒரு சவரன் தங்கம் ரூ.1,04,320-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், வெள்ளியின் விலையும் குறைந்து, ஒரு கிராம் ரூ.210-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 10 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
