சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து புதிய உச்சங்களைத் தொட்டு வரும் நிலையில், இன்று (பிப்ரவரி 25, 2026) தங்கம் மற்றும் வெள்ளி விலையில் அதிரடி உயர்வு காணப்படுகிறது. கடந்த சில நாட்களாகவே ஏறுமுகத்தில் இருந்த தங்கத்தின் விலை, இன்று கிராமுக்கு 40 ரூபாய் உயர்ந்து 14,930 ரூபாய்க்கும், சவரனுக்கு 320 ரூபாய் அதிகரித்து 1,19,440 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வாரத் தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது நகை வாங்குவோரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தங்கத்தின் விலையைத் தொடர்ந்து வெள்ளி விலையும் இன்று கணிசமாக உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை 5 ரூபாய் உயர்ந்து 295 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதேபோல், ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை 2,95,000 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த ஐந்து நாட்களில் மட்டும் ஒரு சவரன் தங்கத்தின் விலை சுமார் 4,000 ரூபாய் வரை உயர்ந்துள்ள நிலையில், சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப இந்த விலை மாற்றம் நிகழ்ந்துள்ளதாகத் தெரிகிறது.
