ப்ளீஸ்… அப்பாவுக்கு மட்டும் இதை சொல்லிடாதீங்க… ஹார்வர்ட் கனவுடன் லட்சக்கணக்கில் ஏமாந்து… தற்கொலை செய்த தங்கப்பதக்க வீராங்கனை… நெஞ்சை பதறவைக்கும் சோகம்…!

By Swetha on ஐப்பசி 11, 2026

Spread the love

இஸ்லாமாபாத்தில் உள்ள சண்டே மார்க்கெட் அருகே இளம் பெண் லாய்பா இஜாஸ், மரத்தில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பன்னாட்டு இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் தங்கம் வென்றவரான இவர், அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் முதுகலை படிக்க விரும்பினார். தனது ஏழ்மையான குடும்பத்திற்கு உதவ நினைத்த அவர், இதற்காக ஒரு போலி குடியேற்ற முகவரை அணுகினார்.

அந்த முகவர் அட்மிஷன் மற்றும் உதவித்தொகை பெற்றுத் தருவதாகக் கூறி 7 மில்லியன் பாகிஸ்தான் ரூபாயை மோசடி செய்தார். இதற்காக லாய்பாவின் தந்தை தன்னிடம் இருந்த நிலத்தை விற்றதுடன், தாயும் தனது நகைகளை அடமானம் வைத்து பணம் திரட்டி முழு தொகையையும் முகவரிடம் கொடுத்தனர். ஆனால், பல்கலைக்கழகத்தை தொடர்பு கொண்டபோதுதான் அந்த ஆவணங்கள் அனைத்தும் போலியானவை என்பது தெரியவந்தது.

   

இந்த பெரும் ஏமாற்றத்தைத் தாங்க முடியாத லாய்பா, “என் தந்தைக்கு இச்சம்பவம் தெரிந்தால் இறந்துவிடுவார், அவரிடம் சொல்லிவிடாதீர்கள்” என்ற இறுதிச் செய்தியை தனது மாமாவுக்கு அனுப்பிவிட்டு வீட்டை விட்டு வெளியேறினார். பின்னர் அவர் அருகில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குடும்பத்தினரையும் மக்களையும் மீளாத் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.