‘அவன் கை கால்களை உடைங்கப்பா…” நடுரோட்டில் மூதாட்டியை குறிவைத்த ஹெல்மெட் ஆசாமி… கொந்தளித்த நெட்டிசன்கள்… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

By Devi Ramu on ஐப்பசி 28, 2026

Spread the love

சேலம் செவ்வாய்பேட்டை பகுதியில் சாலையில் நடந்து சென்ற மூதாட்டி ஒருவரிடம், ஹெல்மெட் அணிந்து வந்த ஆசாமி ஒருவன் மின்னல் வேகத்தில் தங்கச் சங்கிலியைப் பறித்துக்கொண்டு தப்பியோடிய பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் செவ்வாய்பேட்டை பகுதியில் மூதாட்டி ஒருவர் தனியாகச் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர் ஒருவன், கண் இமைக்கும் நேரத்திற்குள் மூதாட்டியின் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியைப் பலவந்தமாகப் பறித்துக்கொண்டு தப்பியோடினான்.

   

இந்தக் கொடூரச் சங்கிலிப் பறிப்பு சம்பவம் அங்குள்ள சிசிடிவி கேமராவில் அப்படியே பதிவாகியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலான நிலையில், “இப்படிப்பட்ட குற்றவாளிகளின் கை, கால்களை உடைக்க வேண்டும்” என நெட்டிசன்கள் கொதித்தெழுந்து கமெண்ட் செய்து வருகின்றனர். இச்சம்பவம் குறித்துச் செவ்வாய்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து, சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தப்பியோடிய ஹெல்மெட் கொள்ளையனைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.