“18 வயதில் பறிபோன உயிர்…! காட்ஸில்லா vs காங் பட மாற்றுத்திறனாளி நடிகை கார் விபத்தில் பலி… சோகத்தில் ஹாலிவுட் திரையுலகம்…!!

By Devi Ramu on ஆடி 22, 2026

Spread the love

‘காட்ஸில்லா vs காங்’ திரைப்படத்தில் ‘ஜியா’ என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துப் புகழ்பெற்ற 18 வயதான ஹாலிவுட் நடிகை கைலி ஹாட்டில், மாரிலாண்ட் பகுதியில் ஏற்பட்ட கோரக் கார் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளியான இவர், காரில் பயணித்தபோது இந்த அசம்பாவிதம் நேர்ந்துள்ளது. விபத்தில் சிக்கிய அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே அவரது உயிர் பிரிந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தனது மகளின் மறைவு குறித்துப் பேசிய அவரது தந்தை ஜோஷுவா ஹாட்டில், உடலைக் கைப்பற்றத் டெக்ஸாஸ் செல்லவுள்ளதாகச் செய்கை மொழியில் கண்ணீருடன் வீடியோ வெளியிட்டுள்ளார். மாற்றுத்திறனாளியாக இருந்தபோதிலும் சிறுவயதிலிருந்தே நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தால் விளம்பரங்களில் நடித்து வந்த கைலிக்கு, சமீபகாலமாக ஹாலிவுட்டில் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் குவிந்து வந்தன. காட்ஸில்லா திரைப்படத்தில் காங்குடன் இவர் செய்கை மொழியில் உரையாடும் உணர்ச்சிப்பூர்வமான காட்சிகள் ரசிகர்களிடையே பிரசித்தி பெற்ற நிலையில், இவரது திடீர் மறைவு சினிமா உலகினரிடையே ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.