Connect with us

படத்த முடிச்சிட்டீங்களா, எப்ப வரும்..? இந்த கேள்விக்கு GOAT பட இயக்குனர் “வெங்கட் பிரபு” என்ன சொல்றாருன்னு நீங்களே கேளுங்க..

CINEMA

படத்த முடிச்சிட்டீங்களா, எப்ப வரும்..? இந்த கேள்விக்கு GOAT பட இயக்குனர் “வெங்கட் பிரபு” என்ன சொல்றாருன்னு நீங்களே கேளுங்க..

 

கோட் பட இயக்குனர் வெங்கட் பிரபு அவர்கள் பத்திரிக்கை துறவினரை நேரில் சந்தித்தபோது, கோட் படத்தின் சில விஷயங்களை பகிர்ந்து உள்ளார். அப்படத்தின் சில அப்டேட்டையும் தெரிவித்திருக்கிறார். விஜய் அவர்கள் லியோவின் வெற்றிக்குப் பின்னர் யாரும் எதிர் பார்க்காத விதமாக வெங்கட் பிரபு அவர்களுடன் கூட்டணி இணைந்து கோட் படத்தை உருவாக்கி வருகிறார்கள்.

இப்படத்தை ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிப்பில் வெங்கட் பிரபு அவர்கள் இயக்கத்தில் விஜய் மற்றும் லைலா, பிரபுதேவா, பிரசாந்த், சினேகா, விடிவி கணேஷ், மீனாட்சி சவுத்ரி, யோகி பாபு இணைந்து நடித்து வருகிறார்கள். இப்படத்தின் டைட்டலையும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் விஜய் அவர்கள் பிறந்த நாளான ஜூன் 22 ஆம் தேதி வெளியிட்டிருந்தார்கள். இப்படத்தில் விஜய் அவர்கள் டபுள் ஆக்ஷனில் நடித்து வருகிறார். ஒன்று வில்லன் கதாபாத்திரமான அப்பாவும், ஹீரோ கதாபாத்திரமான பையனும் இடம்பெற்றுள்ளது.

   

இப்படம் ஆக்சன் மற்றும் டைம் ட்ராவல் லூப் போன்ற முறையில் இயக்குவதால் இப்படத்தில் டெக்னிக்கல் வேலையான VFX, CG போன்ற எடிட்டிங் மிகத் தத்ரூபமாக பார்த்து பார்த்து எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது இப்படத்தின் இயக்குனர் வெங்கட் அவர்கள் செய்தியாளர்கள் சந்திப்பின்போது படத்தின் அப்டேட்டை கேட்டார்கள். அதற்கு வெங்கட் பிரபு அவர்கள் இப்படம் மிகச் சிறப்பாக உருவாக்கிக் கொண்டிருக்கிறது. இப்படத்தின் அப்டேட்டை ஒரு போஸ்டலர் மூலம் கொண்டு வரலாம், ஆனால் அது நன்றாக இருக்காது, இப்படத்தை மேலும் பிரம்மாண்டமாக சிஜி, வி.எப்.எக்ஸ் தொழில்நுட்பத்தை நன்கு தரமாக பயன்படுத்தி இப்படத்தை மேலும் மேலும் தரத்தை கூட்டிக்கொண்டு வருகிறோம்.

அப்பொழுது தான் ரசிகர்களிடம் சேரும்பொழுது இப்படம் மிகச் சிறப்பாக இருக்கும். வி.எப்.எக்ஸ், சி.ஜி சரி இல்லையென்றால் மீண்டும் இதை சரிபார்க்க கடினம், அதனால் இப்படத்தை பார்த்து பார்த்து செய்து வருகிறோம். கூடிய விரைவில் அப்டேட் விடுகிறோம். இப்படம் ஒரு நல்ல ஃபெஸ்டிவல் டைமில் திரைக்கு கொண்டு வருவோம் என்று தெரிவித்திருக்கிறார்.

author avatar
Ranjith Kumar
Continue Reading
To Top