தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் விஜய். வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் விஜய் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் மீனாட்சி சவுத்ரி, லைலா, சினேகா, பிரபு, பிரசாந்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தில் விஜய் அப்பா மகன் என இரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார். வருகிற செப்டம்பர் மாதம் ஐந்தாம் தேதி படம் ரிலீஸ் ஆக உள்ளது.

படத்தின் ஷூட்டிங் ஏற்கனவே முடிவடைந்ததால் தற்போது போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அடுத்ததாக எச் வினோத் இயக்கும் தனது 69-ஆவது படத்தில் விஜய் நடிக்க உள்ளார். அதோடு சினிமாவில் இருந்து விலகி அரசியல் ஈடுபடப் போவதாக விஜய் ஏற்கனவே அறிவித்தார்.

தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியையும் தொடங்கி விட்டார். படத்தில் டிரெய்லர் அப்டேட் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கோட் திரைப்படத்திலிருந்து ரிலீசான மூன்றாவது சிங்கள் மக்களிடையே வரவேற்பை வரவில்லை. இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்கள் யுவன் சங்கர் ராஜா சரியாக இசையமைக்கவில்லை என்ற விமர்சனமும் எழுந்துள்ளது.

தயாரிப்பு நிறுவனத்தினர் பாடல்களில் தவிர விட்ட இடத்தை கோட் படத்தின் ட்ரெய்லரில் பிடிக்க வேண்டும் என வெங்கட் பிரபுவுக்கு கண்டிஷன் போட்டுள்ளார்களாம். படத்தில் இடம்பெற்ற அனைத்து அம்சங்களும் ட்ரைலரில் இருக்க வேண்டும் என தயாரிப்பு நிறுவனத்தினர் கூறி இருந்தனர். இந்த நிலையில் கோட் படத்தின் டிரெய்லரை ஆகஸ்ட் 17- ஆம் தேதி மாலை 5 மணிக்கு ரிலீஸ் செய்ய போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.

#image_title
