“என்ன சொல்றீங்க பிரசாந்த் கூட நானா”?.. விஜய் கேட்ட கேள்வி?.. கோட் பட உண்மையை உடைத்த பிரபலம்..!!

By Nanthini on புரட்டாதி 10, 2024

Spread the love

கோலிவுட்டில் தவிர்க்க முடியாத நடிகராக இருப்பவர் தான் பிரசாந்த். இவருடைய தந்தை தியாகராஜன் சினிமாவில் இருந்தாலும் முறையாக பல கலைகளை பயின்றுவிட்டு தான் சினிமாவிற்கு வந்தார் பிரசாந்த். இவர் முதலில் நடித்த படம் சூப்பர் ஹிட் ஆனதை தொடர்ந்து ஒட்டுமொத்த கோலிவுட்டின் பார்வையும் அவர் மீது திரும்பியது. அந்த சின்ன வயதில் அவ்வளவு பக்குவமான நடிப்பை வெளிப்படுத்தி தான் ஒரு தேர்ந்த திறமையானவர் என நிரூபித்தார் பிரசாந்த்.

   

அதனைத் தொடர்ந்து இவருக்கு பட வாய்ப்புகள் கிடைத்த நிலையில் 90களில் விஜய் மற்றும் அஜித்தை விடவும் டாப்பில் இருந்தார் பிரசாந்த். ஆக்சன் மற்றும் ரொமாண்டிக் என அனைத்திலும் கலக்கினார். தெலுங்கு சினிமாவிலும் சப்போர்ட் ரோல் செய்தார். கடந்த மாதம் இவருடைய நடிப்பில் வெளியான அந்தகன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

   

 

இதனிடையே இளைய தளபதி விஜய் ஹீரோவாக நடித்துள்ள கோட் திரைப்படத்தில் பிரசாந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி வெளியான நிலையில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதில் விஜய் உடன் சேர்ந்து பிரசாந்தின் நடிப்பை ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது.

இந்நிலையில் கோட் படத்தில் பிரசாந்த் நடிப்பது குறித்து விஜய் தயாரிப்பாளரிடம் பேசும்போது, இவரை ஏன் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைக்கிறீங்க, உங்களுக்கு நல்லாவே தெரியும் இல்ல நான் நடிக்க வந்த காலத்தில் இவர் டாப் ஹீரோவாக இருந்தார். அப்புறம் ஏன் இவரை இங்க வைக்கிறீங்க என்று கேட்டார். பிரசாந்திடம் நன்றாக பழகிய பிறகு தான் தெரிந்தது அவரை இத்தனை வருடங்களாக தொலைத்து விட்டோம் என்று. அந்த அளவிற்கு நல்ல மனிதர் என்று தயாரிப்பாளர் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.