உலகின் மூலை முடுக்கெல்லாம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விஷயங்கள் வைரலாகி கொண்டு வருகிறது. அந்த வகையில் விலங்குகளின் சேட்டைகள், குழந்தைகளின் சேட்டைகள் என பலதரப்பட்ட வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டு வைரலாகி வருகிறது. இவை மக்களை சிரிக்க வைப்பதுடன் ஒரு சில வீடியோக்கள் சிந்திக்கவும் வைக்கிறது. அந்தவகையில் தற்போது ஒரு வீடியோ வெளியாகியுள்ளது. தன்னுடைய வேலை உண்டு தான் உண்டு என்ற நபர் ஒருவர் அமைதியாக சாலையில் நடந்து சென்று கொண்டிருக்கிறார். அவர் மீது ஆடு திடீரென்று முட்டுகிறது. இந்த வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.
அந்த நபர் ஏதோ ஒன்று நினைத்துக் கொண்டு மெதுவாக சாலை நடந்து கொண்டிருக்கிறார் . ஆனால் எதிர்பாராத விதமாக ஓரத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த ஆடு பாய்ந்து அவரை தாக்கியதில் தரையில் கீழே விழுந்துள்ளார். இந்த வீடியோவை ஏழாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பார்வையிட்டுள்ளார்கள். இந்த சம்பவம் அந்த நபருக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தாலும் பார்ப்பவர்களை சிரிப்பூட்டும் விதமாக இருக்கிறது. இதை பார்த்த இணையவாசிகளோ “இது பழைய பகை போல தெரிகிறது” என்றாலும் ஆடு அவரை குறி வைத்தது போல தான் இருந்தது என்று நகைச்சுவையாகவும் பதிவிட்டு வருகிறார்கள்.
தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சியமைக்க ஆதரவு அளித்துள்ள இடதுசாரி கட்சிகள், தங்களது ஆதரவுடன் சில முக்கிய நிபந்தனைகளையும் ஆலோசனைகளையும்…
கோயம்புத்தூரைச் சேர்ந்த 23 வயது இளம்பெண் நவ்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது), சென்னை கிண்டி பகுதியில் தனது தோழிகளுடன் தங்கி தனியார்…
தமிழகத்தில் புதிய அரசு அமைப்பதற்கான சூழல் கனிந்து வரும் நிலையில், இடதுசாரி கட்சிகளான சிபிஎம் மற்றும் சிபிஐ ஆகியவை தங்களது…
தமிழக வெற்றிக் கழகத்துடன் (தவெக) கூட்டணி வைப்பது குறித்த யூகங்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம்) தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளது.…
தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழலுக்கு இடையே, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கை "காலத்தின் கட்டாயம்" எனப் பொருள்படும் வகையில்…
அதிமுக மற்றும் திமுக இடையே கூட்டணி அமைய வாய்ப்பிருப்பதாக நிலவி வரும் செய்திகள் வெறும் வதந்திகளே என்று அதிமுக நிர்வாகி…