Connect with us

அமேசான் NETFLIX-க்கு இடையே ஏற்பட்ட கடும் போட்டி.. GOAT பட உரிமத்தை பெற்று கல்லா கட்டப்போவது எது தெரியுமா.?

CINEMA

அமேசான் NETFLIX-க்கு இடையே ஏற்பட்ட கடும் போட்டி.. GOAT பட உரிமத்தை பெற்று கல்லா கட்டப்போவது எது தெரியுமா.?

 

விஜய் சினிமா விட்டு விலகப் போகிறேன் என்று சொன்னதுக்கு அப்புறம், அவர் நடிக்கும் கோட் படமும் அடுத்த படமான விஜய் 69 படத்திற்கும் பயங்கர மார்க்கெட் எகிறி உள்ளது என்று கூறலாம். இப்படத்தை வாங்குவதற்கு OTT தலங்கள் அடித்துப் பிடித்து அதற்கான உரிமத்தை வாங்க படாத பாடுபட்டு வருகிறார்கள். இப்பொழுது வாங்கினால் தான் மொத்த கல்லாவையும் கட்ட முடியும் என்று யோசித்து OTT தலங்கள் கோட் பட உரிமத்தை வாங்க பல கோடிகளை கொட்டியுள்ளார்கள்.

வெங்கட்ரபு இயக்கத்தில் விஜய் டபுள் ஆக்சன் ரோலில் நடித்து வரும் படம் தான் கோட். இப்படத்தில் விஜயுடன் மீனாட்சி சவுத்ரி, லைலா, சினேகா, பிரபுதேவா, பிரசாந்த், யோகி பாபு, VTV கணேஷ் பலரும் இணைந்துள்ளார்கள். இப்படம் நீண்ட எதிர்பார்ப்புடன் உருவாக்கிக் கொண்டிருக்கிறது. ஏனென்றால் விஜய் அவர்கள் கட்சி ஆரம்பித்து முழு நேர அரசியல்வாதியாக ஆகப் போகிறேன் என்றும், அதனால் தற்போது நடிக்கும் கோட் படமும் அதற்கு அடுத்த படமான 69 படத்தின் நடித்து முடித்த பின் சினிமா விட்டு விலகுகிறேன் என்று சொன்ன தனால்,

   

தற்போது நடிக்கும் கோட் படத்தை வாங்குவதற்கு ஓ.டி.டி தலங்கள் நான் நீ என்று சண்டையிட்டு உரிம்மை பெற அல்லோல படுகிறார்கள். தற்போது தமிழ், தெலுங்கு, மலையாள, ஹிந்தி, கன்னடம் போன்ற மொழிகளின் டிஜிட்டல் உரிமம் 129 கோடி வசூலாகி உள்ளதாம். இதில் ஹிந்தி மட்டும் 25 கோடிக்கு உரிமம் பெற்றுள்ளதாம். இந்த சமயத்தில் தான் கல்லாகட்ட வேண்டும் என்று யோசித்து அமேசான், netflix போன்ற நிறுவனங்கள் முந்தி அடித்துக் கொண்டு வந்து விஜயின் கோட் படத்தை வாங்க முயன்று உள்ளார்கள்.

இதில் அனைத்து நிறுவனத்தின் தட்டி விட்டு படத்தை பல கோடி கொடுத்து உரிமத்தை “NETFLIX” தற்போது வாங்கியுள்ளதாம். விஜயின் 69 வது படம் இன்னும் எடுக்கவே தொடங்கவில்லை, அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வரவே இல்லை, அதற்கு முன்னதாகவே நெட்பிலிக்ஸ் இப்படத்திற்கான OTT உரிமத்தை துண்டு போட்டு பதிவு பண்ணி உள்ளதாம்.

author avatar
Ranjith Kumar
Continue Reading
To Top