“வீட்டுக்குள்ள போய் எல்லாருகிட்டயும் சொல்லிட்டு மெயின் டோர் வழியா வெளிய வாங்க”… ஜி.பி. முத்து-விடம் கூறிய பிக் பாஸ்…. ஷாக்கான ரசிகர்கள்…

பிக்பாஸ் நிகழ்ச்சியின் முக்கிய போட்டியாளரான  ஜிபி முத்து, வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இது குறித்த வீடியோ ஒன்று தற்பொழுது இணைய தளத்தில் வெளியாகியுள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரம்மாண்ட ரியாலிட்டி ஷோ பிக் பாஸ். உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்த நிகழ்ச்சி, அக்டோபர் 9 ஆம் தேதி தொடங்கப்பட்டது. மொத்தம் இதில் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், பிக்பாஸ் வீட்டுக்குள் முதல் போட்டியாளராக சென்ற ஜிபி முத்து தற்போது முதல் போட்டியாளராக வெளியே வந்துள்ளார் என்ற தகவல் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது.

ஜிபி முத்து தான் 100 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்து டைட்டில் பட்டத்தை வெல்வார் என அவரது ரசிகர்கள் நினைத்துக் கொண்டிருக்கும் பொழுது இவர் திடீர் என வெளியேறி உள்ள சம்பவம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.பிக்பாஸ் வீட்டில் முதல் வாரம் முழுக்க மிகவும் கலகலப்பாக இருந்த இவருக்கு இரண்டாவது வாரத்தில் இருந்து, தன்னுடைய குடும்பம் மற்றும் குழந்தைகளின் நியாபகம் வந்து விட்டது.

இதைத்தொடர்ந்து அவர் கண்ணீருடன் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என, பலமுறை பிக்பாஸ்ஸிடம் கூறி வந்தார். பிக்பாஸ் பல  முறை  ஜிபி முத்துவை  சமாதானம் செய்ய முயற்சித்தார். பின்னர் ‘முடிவு உங்கள் கையில் உள்ளது’ என கூறி அனுப்பினார்.

 

இதைத்தொடர்ந்து தற்பொழுது “வீட்டுக்குள்ள போய் எல்லாருகிட்டயும் சொல்லிட்டு மெயின் டோர் வழியா வெளிய வாங்க” என்று பிக் பாஸ் ஜிபி முத்துவிடம் கூறியுள்ளார். இதைக்கேட்ட ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். தற்பொழுது இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், இவை அனைத்தும் உண்மையில்லை என தற்பொழுது தெரியவந்துள்ளது.

இந்த வீடியோவை ஜி.பி. முத்துவின் ரசிகர்கள் தத்ரூபமாக எடிட் செய்து வெளியிட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது. இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் படு வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ உங்களுக்காக…