செருப்புக்குள் இருந்த கண்ணாடி விரியன் பாம்பு.. “காலில் உணர்ச்சியே இல்ல” இன்ஜினியர் பலி… அதிர்ச்சி சம்பவம்..!!

By Srimathi on புரட்டாதி 1, 2025

Spread the love

கர்நாடகா மாநிலத்தை சேர்ந்தவர் மஞ்சு பிரகாஷ் (41), கம்ப்யூட்டர் இன்ஜினியர்ராக தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் மதியம், வீட்டின் வெளியே கிடந்த கட்-ஷூவை போட்டுக்கொண்டு மஞ்சு பிரகாஷ் கடைக்குச் சென்றுள்ளார். பின் கடைக்குச் சென்று ஜூஸ் வாங்கிக் கொண்டு வந்து, தனது செருப்பை வீட்டு வாசலில் விட்டு விட்டு, தனது அறையில் சென்று உறங்கி இருக்கிறார்.

இந்நிலையில் மஞ்சு பிரகாஷ் வீட்டுக்கு வந்த தொழிலாளி, அவரின் செருப்புக்குள் பதுங்கி இருந்த  பாம்பை கண்டு குடும்பத்தினரிடம் தெரிவித்தார். உடனே அவர்கள் அந்தப் பாம்பை ஒரு கம்பை கொண்டு வெளியேற்றினர். அப்பொழுது அது கண்ணாடி விரியன் பாம்பு என்பது தெரிய வந்தது. மேலும் படுக்க அறையில் உறங்கிக் கொண்டிருந்த மஞ்சு பிரகாஷை காண குடும்பத்தினர் விரைந்து சென்ற பொழுது, படுக்கையறையில் வாயில் நுரை தள்ளியபடி மஞ்சு பிரகாஷ் கிடந்தார். அவரை மருத்துவமனைக்கு குடும்பத்தினர் அழைத்துச் சென்றனர். அங்கு அவரை சோதித்த மருத்துவர்கள், மஞ்சு பிரகாஷ் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

   

மேலும் தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், கடந்த 2016 ஆம் ஆண்டு மஞ்சு பிரகாசுக்கு ஏற்பட்ட விபத்தில், காலில்  பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. பின் அவரது கால் உணர்ச்சியற்றதாக மாறி, மறுத்து போய்விட்டது. இதனால் செருப்புக்குள் இருந்த பாம்பு கடித்தது கூட மஞ்சு பிரகாசுக்கு தெரியவில்லை என்று தெரிவித்தனர். மேலும் இந்தச் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.