ஒவ்வொருவர் வாழ்விலும் மிக முக்கியமான அங்கமாக செயல்படுவது குழந்தை வளர்ப்பு. எல்லோருக்கும் தங்களது குழந்தை அறிவு பூர்வமாக புத்திசாலியாக இருக்க வேண்டும் என்றுதான் நினைப்பார்கள். ஆனால் ஒரு சில குழந்தைகளுக்கு படித்தது நினைவில் இருக்காது கவனம் இருக்காது போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். ஒவ்வொரு குழந்தைகளும் அறிவுபூர்வமாக இருக்க அவர்களது மூளை சுறுசுறுப்புடன் வேகமாக இயங்க இந்த உணவுகளை அவர்களுக்கு கொடுத்தால் சாத்தியமாகும். அது என்னவென்று இனி காண்போம்.
குழந்தைகளுக்கான சூப்பர் உணவுகளின் பட்டியலில் முதலில் வருவது நட்ஸ். மூளை ஆற்றலுக்கு உதவும் ஆக்சினேற்றிகள், துத்தநாகம், ஒமேகா 3 மற்றும் ஒமேகா 6 என்ற அனைத்தும் நட்ஸ் மற்றும் உலர் பழங்களில் காணப்படுகின்றன. பாதாம் பருப்பு வால்நட் இரண்டும் குழந்தைகளின் நினைவாற்றலை அதிகரிக்கும்.
அடுத்ததாக ஒரு சிறந்த புரதமாக கருதப்படும் முட்டையின் மஞ்சள் கருவில் நினைவாற்றல் வளர்ச்சிக்கு உதவும் கோலின் நிறைந்துள்ளது. குழந்தைகளுக்கு தினமும் ஒரு முட்டை கொடுத்து வந்தால் அவர்கள் புத்தி கூர்மையாகும். அடுத்தது வேர்க்கடலை. ஏழைகளின் பாதம் எனப்படும் வேர்க்கடலை மூளை நன்றாக செயல்பட உதவுகிறது. இதில் வைட்டமின் ஏ சிறந்த ஆகிசினேற்றிகள் ஆகும். இதை தினமும் சிறிதளவு குழந்தைகளுக்கு கொடுக்கும்போது அவர்கள் மூளை வேகமாக இயங்கும்.
ஞாபக சக்தி அதிகரிக்க உதவும் லைக்கோபின் என்ற தனிமம் தக்காளியில் அதிகமாக இருக்கிறது. அதனால் குழந்தைகளுக்கு தினமும் தக்காளியை சேர்த்த உணவுகளை கொடுக்கலாம். அடுத்து பெர்ரி பழங்கள். ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ள ஸ்ட்ராபெரி மற்றும் அவுரி நெல்லிகள் குழந்தைகளின் மூளையை கூர்மையாக்க உதவுகிறது.
மேலும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் புரதம் நிறைந்த மீன் உணவுகள் மூளையின் செயலை அதிகப்படுத்தும். குழந்தைகளுக்கு நல்ல ஒமேகா நிறைந்த மீன்களை கொடுக்கலாம். அடுத்து பருப்பு வகைகள். புரதம் நார்ச்சத்துக்களின் நல்ல மூலதனமான பருப்புகள் மூளை மற்றும் நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டிற்கு உதவுகிறது. கால்சியத்தின் ஆதாரமாக பால் கருதப்பட்டாலும் அது எலும்புகளுக்கும் மூளைகளுக்கும் நன்மை பயக்கும். தினமும் ஒரு டம்ளர் பால் குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் அவர்களது மூளை வேகமாக இயங்கும். இது தவிர பச்சை காய்கறிகளையும் கொடுக்கலாம். இது போன்ற உணவுகளை உங்களது குழந்தைகளின் உணவில் அன்றாடம் சேர்த்துக் கொண்டால் அவர்களின் மூளை கூர்மையாகும்.
மத்தியப் பிரதேச மாநிலம் குனோ தேசியப் பூங்காவில் 19 மாத வயதுடைய ஆண் சிறுத்தை ஒன்று துப்பாக்கிக் குண்டு பாய்ந்த…
தலைநகர் டெல்லியின் பஞ்சாபி பாக் பகுதியில் புதன்கிழமை அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர்…
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே காதில் இயர்போன் மாட்டியபடி ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்ற நபர் ஒருவர், ஓட்டுநர் தொடர்ச்சியாக…
பஞ்சாப் மாநிலம் கிரத்பூர் சாஹிப் அருகே நிகழ்ந்த கோர விபத்தில் நான்கு பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இமாச்சலப் பிரதேசத்தின் குல்லு…
வீட்டில் யாரிடமும் சொல்லாமல் இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்ற 10-ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுவன் ஒருவன், பெற்றோரின்…
கர்நாடக மாநிலம் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி அருகே அதிவேகமாக வந்த டோயோட்டா ஃபார்ச்சூனர் சொகுசு கார் மோதியதில், சைக்கிளில் சென்ற…