அட கடவுளே.. நகை வாங்குவது போல் நடித்து மிளகு ஸ்ப்ரே அடித்து… கொள்ளையடிக்க முயன்ற சிறுமிகள்… பாட்னாவில் பரபரப்பு…!!

By Swetha on ஆனி 14, 2026

Spread the love

பீகார் மாநிலம் பாட்னாவின் தீபா பகுதியில் ‘மா வைஷ்ணோ’ என்ற நகைக்கடை இயங்கி வருகிறது. இங்கு வழக்கம்போல வியாபாரம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, பிற்பகல் வேளையில் முகத்தில் துணியை சுற்றிக்கொண்டு வந்த 2 சிறுமிகள் சாதாரண வாடிக்கையாளர்களைப் போல கடைக்குள் நுழைந்துள்ளனர்.

அவர்கள் நகை வாங்குவது போல நடித்து, கடைக்காரரிடம் நகைகளைக் கேட்டுள்ளனர். கடைக்காரர் அவர்களை நம்பி நகைகளை வெளியே எடுத்து காட்டியபோது, எதிர்பாராத விதமாக அந்தப் பெண்ணில் ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த மிளகு ஸ்ப்ரே பாட்டிலை எடுத்து, கடைக்காரரின் முகத்தில் சரமாரியாக அடித்துள்ளார்.

   

இதனால் நிலைகுலைந்த கடைக்காரர், உடனடியாக சமயோசிதமாக செயல்பட்டு வேகமாக நீரை எடுத்து முகத்தைக் கழுவினார். பின்னர் கடையை விட்டு வெளியே ஓடி வந்து, உடனடியாக கடையின் ஷட்டரை கீழே இழுத்து மூடி திருடர்களை உள்ளேயே பூட்டினார். இதைத்தொடர்ந்து கடையின் ஊழியர்கள் அபாய ஒலி எழுப்பியதால், சத்தம் கேட்டு அங்கிருந்த உள்ளூர் மக்கள் கடையின் முன்பு திரண்டனர். இச்சம்பவம் குறித்து போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.