#image_title
சிம்ரன் மும்பையில் பஞ்சாபி குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். இவரின் இயற்பெயர் ரிஷிபாமா என்பதாகும். தூர்தர்ஷன் மெட்ரோ சேனலில் சூப்பர் ஹிட் முக்காப்புலா என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் மூலம் தனது திரையுலக பயணத்தை ஆரம்பித்தவர் சிம்ரன்.
ஆரம்பத்தில் ஹிந்தி திரையுலகில் 1995ஆம் ஆண்டு சனம் ஹர்ஜாய் என்ற படத்தில் நடித்தது மூலம் அறிமுகமானார். பின்னர் மலையாளத்தில் மம்முட்டியுடனும் கன்னடத்தில் சிவராஜ்குமார் உடனும் நடித்து அதில் அறிமுகமானார். பிறகு 1997 ஆம் ஆண்டு ஒன்ஸ்மோர் திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.
தமிழ் சினிமாவில் 2000 களின் முற்பகுதியில் உச்சபட்ச நட்சத்திரமாக புகழின் உச்சத்தில் இருந்தார் சிம்ரன். அந்த காலத்தில் அதிக சம்பளமான 75 லட்சத்திற்கும் மேல் வாங்கிய நடிகை சிம்ரன் தான் என்பது குறிப்பிடத்தக்கது. தனது எதார்த்தமான நடிப்பினாலும் வசீகரிக்கும் முகத்தினாலும் ஏராளமான ரசிகர்களை கொண்டவர் சிம்ரன்.
நட்புக்காக, துள்ளாத மனமும் துள்ளும், கண்ணெதிரே தோன்றினாள், அவள் வருவாளா, வாலி, ஜோடி, பிரியமானவளே, பார்த்தேன் ரசித்தேன், உன்னை கொடு என்னை தருவேன் போன்ற வெற்றி திரைப்படங்களில் நடித்தவர் சிம்ரன். தமிழ் திரையுலகில் மிகவும் திறமையான நடிகர்களில் ஒருவரான சிம்ரன் தனது நடிப்பிற்காக மூன்று ஃபிலிம் ஃபேர் விருதுகள் ஒரு மாநில திரைப்பட விருது ஆகியவற்றை வென்றுள்ளார்.
2003 ஆம் ஆண்டு தனது இளம் வயது நண்பரான தீபக் பாக்காவை திருமணம் செய்து கொண்ட சிம்ரன், அதற்குப் பிறகு தமிழ் திரையுலகில் இருந்து சற்று இடைவெளி எடுத்துக்கொண்டார். பின்னர் 2008 ஆம் ஆண்டு வாரணம் ஆயிரம் படத்தின் மூலம் கம்பேக் கொடுத்தார். அதற்குப் பிறகு 2019 ஆம் ஆண்டு பேட்ட போன்ற திரைப்படங்களில் இடைவெளி விட்டுவிட்டு நடித்தார். தற்போது நடிகர் பிரசாந்த் நடித்துள்ள அந்தகன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் சிம்ரன். அந்தகன் பட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிம்ரன் பெண்களின் மோசமான விஷயத்தை பற்றி பேசி உள்ளார்.
அவர் கூறியது என்னவென்றால், பொண்ணுங்க ஒரு பையன லவ் பண்றாங்க அப்படின்னா அவங்கள போட்டு டார்ச்சர் பண்ண கூடாது. யார்கிட்ட போன் பேசுற எங்க போற அப்படின்னு கேட்க கூடாது. அவர்களை இறுக்கி பிடிக்காமல் ஃப்ரீயா விடணும். நானும் ஒரு காலத்துல அப்படி தான் இருந்தேன். நான் பொண்ணுங்க கிட்ட பார்த்த Worst ஆன விஷயம் இதுதான் என்று ஓபனாக பகிர்ந்துள்ளார் நடிகை சிம்ரன்.
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியனின் சர்ச்சை பேச்சு, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு புதிய…
பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரின் லோபோகே கிராமத்தைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் என்பவருக்கு, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சந்தீப் கவுர்…
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலத்…
ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பியூட்டி பார்லரின் உரிமையாளர், அங்கு பணிபுரியும்…
மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள மாதாசுலா கிராமத்து அரசு ஆரம்பப் பள்ளியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.…
அதிமுக ஒரு சரியான கட்சி; ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒரு தவறான தலைவர் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும்,…