உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர்நகரில், 8 ஆண்டுகால காதல் விவகாரம் விபரீதத்தில் முடிந்துள்ளது. ஹினா என்ற பெண், தனது காதலன் பப்ளுவுக்கு வேறொரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடந்ததை அறிந்து ஆத்திரமடைந்துள்ளார். இதனைத் தொடர்ந்து, சமாதானம் பேசுவதாகக் கூறி பப்ளுவை ஹோட்டல் அறைக்கு வரவழைத்த ஹினா, அங்கு அவருக்கு மயக்க மருந்து கலந்த உணவைக் கொடுத்துள்ளார்.
பப்ளு மயக்கமடைந்த நிலையில், ஹினா கத்தியால் அவரது அந்தரங்க உறுப்பைத் துண்டித்து எறிந்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இரத்த வெள்ளத்தில் கிடந்த பப்ளுவை மீட்ட ஹோட்டல் ஊழியர்கள் மற்றும் காவல்துறையினர், அவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், தலைமறைவாக உள்ள ஹினாவைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
