உத்தரப் பிரதேச மாநிலம் பீலிபித் பகுதியில் அமன்தீப் கவுர் என்ற பெண், தன் காதலனிடமிருந்து விலகுவதற்காக அவரை லாரியின் கேபினுக்குள் வைத்து கொடூரமாகக் கொலை செய்துள்ளார். லாரியின் கேபினில் இருந்த காதலனின் தலையில் இரும்புக் கம்பியால் பலமாகத் தாக்கி அவரை மயக்கமடையச் செய்த அமன்தீப், பின்னர் அவர் மீது டீசலை ஊற்றித் தீ வைத்துள்ளார். இச்சம்பவத்தை விபத்து போலக் காட்டிவிட்டு, அவ்வழியாக வந்த மற்றொரு வாகனத்தில் ஏறித் தன் பெற்றோர் வீட்டிற்குத் தப்பிச் சென்றுள்ளார்.
ஆரம்பத்தில் இச்சம்பவத்தை ஒரு விபத்து என்றே கருதிய காவல்துறையினர், உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு எழுந்த சந்தேகம் மற்றும் அப்பகுதியிலிருந்த சிசிடிவி காட்சிப் பதிவுகளின் அடிப்படையில் தீவிர விசாரணை நடத்தினர். 14 நாட்களுக்குப் பிறகு உண்மை வெளிவந்ததையடுத்து, அமன்தீப் கவுரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட இரும்புக் கம்பி மற்றும் காலி டீசல் கேன் ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
