இங்கிலாந்தைச் சேர்ந்த காதலர்களான பால்மர் மற்றும் டெல் விஷியோ ஆகிய இருவரிடையே ஏற்பட்ட வாக்குவாதம் பயங்கரமான மோதலில் முடிந்துள்ளது. அப்போது போதையில் இருந்த காதலி டெல் விஷியோ, ஆவேசத்தின் உச்சியில் தனது காதலன் பால்மரின் பிறப்புறுப்பைக் கடித்ததாகக் கூறப்படுகிறது. இந்தத் தாக்குதலில் பால்மரின் விரைப்பை கிழிந்து பலத்த காயம் ஏற்பட்டது.
காயமடைந்த பால்மர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு, சுமார் 15 தையல்கள் போடப்பட்டு மருத்துவர்களால் அவர் காப்பாற்றப்பட்டார். சில காலத்திற்கு முன்பு நடந்த இந்தச் சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் (SM) மீண்டும் வைரலாகி வருகிறது.
