சிறுமி படுகொலை.. குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை கொடுங்க.. அன்புமணி வலியுறுத்தல்..!!

By Soundarya on வைகாசி 23, 2026

Spread the love

கோவையில் சிறுமி கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்ட கொடூரச் சம்பவத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது கடுமையான கண்டனத்தை அறிக்கை வாயிலாக வெளியிட்டுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினருக்குத் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள அவர், இந்த மனிதாபிமானமற்ற செயலில் ஈடுபட்ட கயவர்களுக்கு நீதிமன்றம் மூலம் உடனடியாகத் தூக்குத் தண்டனை பெற்றுத் தர வேண்டும் எனத் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார். மேலும், கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராகப் பதியப்பட்ட குற்றச்சாட்டுகளைக் சுட்டிக்காட்டியுள்ள அவர், இனி வரும் காலங்களில் இதுபோன்ற அவலநிலை தமிழ்நாட்டில் மீண்டும் தொடரக் கூடாது என்றும் எச்சரித்துள்ளார்.

சமீபத்தில் பொறுப்பேற்றுள்ள முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசு, பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யத் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார். குறிப்பாக, குற்றங்களைத் தடுக்க தவெக அரசு எடுத்து வரும் ‘சிங்கப் பெண் சிறப்புப் படை’ உள்ளிட்ட தொடக்கக்கட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பாராட்டியுள்ள அவர், வெறும் அறிவிப்புகளோடு நின்றுவிடாமல் கள அளவில் பெண்களின் பாதுகாப்பிற்கு இந்த அரசு கூடுதல் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்