நடிகை ராஷ்மிகா மந்தனா இன்று National Crush என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார் நடிகை ராஷ்மிகா மந்தனா. கடந்த 2016 ஆம் ஆண்டு வெளிவந்த கிரிக் பார்ட்டி என்ற படத்தின் மூலமாக சினிமாவுக்கு அறிமுகமானார் ரஷ்மிகா. அதனை தொடர்ந்து பல படங்களில் நடித்துவிட்டார். தெலுகு கன்னடம் தமிழ் உள்ளிட்ட பல மொழி படங்களில் தற்போது நடித்து வருகிறார்.

மேலும், நடிகர் அமிதாப் பச்சன், விஜய், அல்லு அர்ஜுன், ரன்பீர் கபூர் என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ள நடிகை ராஷ்மிகா அடுத்ததாக நடிகர் தனுஷுடன் D51 திரைப்படத்தில் இணைகிறார். இந்நிலையில் தற்போது அச்சு அசல் அப்படியே நடிகை ராஷ்மிகாவை போலவே இருக்கும் பெண் ஒருவரின் வீடியோ வெளியாகியுள்ளது.

இந்த வீடியோவை பார்க்கும் ரசிகர்கள் அனைவரும், அட இவர் அப்படியே பார்ப்பதற்கு ராஷ்மிகா போலவே இருக்கிறாரே என்று கமெண்ட் செய்து வருகிறார்கள். ஆனால் வேறு சிலரோ இது மார்பிங் செய்தது போல் இருக்கிறது, உண்மையில்லை என்றும் கூறி வருகிறார்கள். இதோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வரும் அந்த வீடியோ..
Rashmika mathiriye irukka ???????????? pic.twitter.com/MpLhphP48y
— ` (@sigma__male__) October 25, 2023
