தெலங்கானா மாநிலம் மேட்சல் மாவட்டம் ஓல்ட் அல்வால் ஜொன்னபண்டா பகுதியைச் சேர்ந்த சாய்நாத் – அஸ்வினி தம்பதியின் 6 வயது மகள் சரக்ஷியின் பிறந்தநாளை முன்னிட்டு, குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் ஹைதராபாத் டேங்க் பண்ட் பகுதிக்கு இரவு நேரத்தில் கேக் வெட்டச் சென்றுள்ளனர்.
திரையரங்கில் படம் பார்த்துவிட்டுச் நள்ளிரவில் டேங்க் பண்ட் சாலையில் நடந்து சென்றபோது, செகந்திராபாத் பகுதியிலிருந்து அதிவேகமாக வந்த லாரி ஒன்று எதிர்பாராதவிதமாகச் சிறுமி சரக்ஷி மற்றும் அவரது உறவினரான விஸ்வநாத் (40) மீது மோதியது. இதில் 6 வயதுச் சிறுமி சரக்ஷி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 3 மாதங்களுக்கு முன்புதான் திருமணமான மீசேவா ஊழியர் விஸ்வநாத், பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, தப்பிச் சென்ற லாரி ஓட்டுநரைத் தேடி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
