“அட கடவுளே… கொட்டித்தீர்த்த மழையில்… ஓடும் ஸ்கூட்டர் மீது… திடீரென வேரோடு சாய்ந்த ராட்சத மரம் – முதியவரின் கதி என்ன…?”

By Swetha on ஆடி 6, 2026

Spread the love

புனேயின் பிம்பிளே சௌதாகர் பகுதியில் பெய்த கனமழை காரணமாக, குனால் ஐகான் சாலையில் திடீரென ஒரு பெரிய மரம் வேரோடு சாய்ந்து விழுந்துள்ளது. அப்போது அந்த வழியாகச் சென்ற முதியவர் ஒருவர் மீது மரம் விழுந்ததில், அவர் அதன் இடிபாடுகளுக்குள் சிக்கி பலத்த காயமடைந்தார்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும், உள்ளூர் பொதுமக்கள், போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். மரத்தின் அடியில் சிக்கியிருந்த முதியவரைப் பத்திரமாக மீட்டு, சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சேர்த்தனர்.

   

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த முதியவருக்குத் தலையிலும், முதுகெலும்பிலும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதோடு, அவரது உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. மழைக் காலங்களில் இதுபோன்ற விபத்துகளைத் தவிர்க்க மரங்களின் அருகே வாகனங்களை நிறுத்த வேண்டாம் என மாநகராட்சி நிர்வாகம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.