குஜராத் மாநிலம் வதோதராவில் சுமார் 10 அடி நீளம் கொண்ட இரண்டு ‘மக்கர்’ வகை முதலைகள் மக்கள் நடமாட்டம் மிகுந்த சாலைகளில் சாதாரணமாக உலா வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் ஒரு முதலை சாமா-சாவ்லி சாலையில் உள்ள ஊர்மி பாலத்தின் மீது ஊர்ந்து செல்வதைக் கண்ட வாகன ஓட்டிகள் அதிர்ச்சியில் உறைந்தனர்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், “முதலை என்னவோ தெருவில் சாதாரணமாக நடைப்பயிற்சி மேற்கொள்வது போல இருக்கிறது” என நெட்டிசன்கள் கிண்டலாகவும் ஆச்சரியமாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Chill this is Vadodara 🐊🐊
Crocodile went to hang on the Urmi Bridge of Vadodara!#Vadodara pic.twitter.com/M7Cmk5Zc1d
— My Vadodara (@MyVadodara) March 5, 2026
“>
மேலும் தகவலறிந்து விரைந்து வந்த வனத்துறையினர் மற்றும் தன்னார்வலர்கள், போக்குவரத்தை தற்காலிகமாக சீர்செய்து நீண்ட போராட்டத்திற்குப் பிறகு அந்த முதலையைப் பத்திரமாக மீட்டனர். அதே நாளில், ஜம்புவா பாலம் அருகேயுள்ள குடியிருப்புப் பகுதியிலும் மற்றொரு பெரிய முதலை தென்பட்டது; அதையும் வனத்துறையினர் பாதுகாப்பாகப் பிடித்தனர்.
இந்நிலையில் வதோதராவின் விஸ்வாமித்ரி ஆற்றில் அதிகப்படியான முதலைகள் வசிப்பதால், நீர்மட்டம் மாறும்போது அல்லது இரை தேடும்போது அவை அடிக்கடி நகருக்குள் புகுந்து விடுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும், அதிர்ஷ்டவசமாக இந்த இரண்டு சம்பவங்களிலும் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.
