அரசியல் போனாலும் வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணனும்.. ‘GOAT’ பட சூட்டிங் நடுவே கோரிக்கை வைத்த டிஸ்ட்ரிபியூட்டர்.. வைரல் வீடியோ..!

By Mahalakshmi on ஏப்ரல் 24, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய்.  தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் என்ற திரைப்படத்தில் நடித்த வருகிறார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து தளபதி 69 திரைப்படத்தின் நடிக்க இருக்கிறார். இதுதான் கடைசி திரைப்படம் என்று கூறப்பட்டு வருகின்றது. விஜய் கேரியரில் மிக முக்கிய திரைப்படமாக அமைந்தது கில்லி.

   

இந்த திரைப்படத்தில் விஜய், திரிஷா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். இந்த திரைப்படம் கடந்த ஏப்ரல் 20-ம் தேதி ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. புது திரைப்படம் ரிலீசானால் எந்த அளவுக்கு வரவேற்பு கிடைக்குமோ அதே அளவுக்கு வரவேற்பு இந்த திரைப்படத்திற்கு கொடுக்கப்பட்டது. இதை பார்த்த பலரும் ஆச்சரியப்பட்டு போய் இருந்தார்கள்.

   

 

மேலும் இப்படத்தின் டிஸ்ட்ரிபியூட்டர் மற்றும் தயாரிப்பாளர் ஏ.எம் ரத்தினம் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார்கள். இதைத் தொடர்ந்து விஜய் நேரில் சந்தித்த டிஸ்ட்ரிபியூட்டர் மற்றும் தயாரிப்பாளர் அவருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். அதுமட்டுமில்லாமல் அரசியலுக்கு சென்றாலும் வருடத்திற்கு ஒரு படமாவது நீங்க பண்ண வேண்டும் என்று மிகவும் வலியுறுத்தி கேட்டுக்கொண்டார் டிஸ்ட்ரிபியூட்டர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by NewsBugz (@newsbugz_official)