அஜித் தவற விட்ட 2 படங்கள்.. சூர்யாவின் இந்த கேரக்டரை தல பண்ணி இருந்தா எப்படி இருந்திருக்கும்.!

By Ranjith Kumar

Published on:

தமிழ் சினிமாவில் டாப் ஹீரோவாக வலம் வருவது தான் அஜித் குமார். இவர் ஆரம்ப காலகட்டத்தில் மெக்கானிக் ஆகும் கார் ரேசர் ஆகும் இருந்தவர், சினிமாவில் ஆர்வம் கொண்டு 1990 கால கட்டத்தில் “என் வீடு என் கனவு” என்ற படம் மூலமாக சினிமாத்துறைக்கு அறிமுகமானார். இதில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் அஜித்தின் நடிப்பு திறமையால் பல படங்கள் வந்து குவிய ஆரம்பித்தது. அந்த வரிசையில் 1992 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் முதல் முதலாக அமராவதி படம் மூலமாக அறிமுகமானார்.

முதல் படத்திலேயே தன் அழகான நடிப்பாலும் கவர்ச்சியூட்டும் அழகாலும் தமிழ் மக்களின் மனதை பிடித்து விட்டார். அதன் பின்னராக ஆண்கள் கூட்டத்தை விட பெண்கள் ரசிகர் கூட்டம் அஜித்துக்கு அதிகமாகி விட்டது. அதைத்தொடர்ந்து மேலும் அவர் காதல் கோட்டை, ராஜாவின் பார்வையிலே, பாசமலர்கள் போன்ற படங்களில் நடித்து காதல் மன்னனாக வலம் வந்து கொண்டிருந்தார். அஜித்குமார் அதன் பின்னதாக 1999 ஆம் ஆண்டு முதல் முதலில் அமர்க்களம் படம் மூலம் ஆக்ஷன் ஹீரோவாக அறிமுகமானார. அதன் பின் இவருக்கு மார்க்கெட் ஏறியதால், மாஸ் ஹீரோவாக தமிழ் திரையுலகில் வளம் வர ஆரம்பித்தார், அந்த வரிசையில் வரலாறு, சிட்டிசன், பில்லா போன்ற ஆரம்ப காலகட்டத்தில் மாஸ் படங்கள் மூலம் பிளாக் பஸ்டர் கிட் கொடுத்தார்.

   

அதன் பின் இந்தியா சினிமா துறையில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்து டாப் 10 ஹீரோக்கள் ஒருவராக வலம் வந்து வசூல் மன்னனாக இருந்தார். அந்த சமயத்தில் இவர் நடிப்பில் உருவான படம் தான் மங்காத்தா, என்னை அறிந்தால், வீரம், துணிவு போன்ற படங்களாகும். தற்போது விடாமுயற்சி படத்தில் மகிழ்திருமேனி இயக்கத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். தற்போது, இப்படம் இந்தியா அளவில் மாபெரும் எதிர்பார்ப்பை கிளப்பி இருக்கிறது.

இவர் இவ்வளவு ஹிட் படங்களை கொடுத்து நம்பர் 3 ஹீரோக்களில் ஒருவராக இருந்தாலும், ஆரம்ப காலகட்டத்தில் மெகா பாஸ்டர் ஹிட் கொடுத்த படங்களை தவற விட்டிருக்கிறார். அந்த வரிசையில் ஏ ஆர் முருகதாஸ் அவர்கள் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியாகி பட்டி தொட்டி எல்லாம் பட்டையை கிளப்பிய படம் தான் கஜினி. இப்படம் முதலில் அஜித் அவர்களுக்கு தான் கதை சொல்லப்பட்டது, ஆனால் அஜித் இதை வேண்டாம் என்று மறுத்தலிக்க சூர்யா நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி அடைந்தது.

அதற்கடுத்ததாக எஸ் ஜே சூர்யா அவர்கள் நடிப்பில் வெளிவந்த நியூ படத்தில் முதலில் அஜித்தை தான் நடிக்க வைப்பதற்கு அணுகியுள்ளார், ஆனால் கதை சரியாக பிடிப்படாமல் இருந்ததால் படத்தை வேண்டாம் என்று மறுத்தலித்து விட்டார். ஆனால் எஸ் ஜே சூர்யா நடிப்பில் இப்படம் மாபெரும் வெற்றி அடைந்து தற்போது வரை மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளது.

author avatar
Ranjith Kumar