தமிழ் சினிமாவின் வளர்ச்சிக்கு இசையும் மிக முக்கிய காரணம் தான். இளையராஜா தொடங்கி அனிருத் வரை இசையில் கோலோச்சிய பிரபலங்கள் ஏராளம். அதிலும் குறிப்பாக 90களில் இளையராஜாவை மிஞ்ச ஆளே கிடையாது. அதன் பிறகு ஏ ஆர் ரகுமான் வந்து சுமார் 20 ஆண்டுகள் ஆதிக்கம் செலுத்திய நிலையில் பின்னர் அனிருத் அவருடைய இடத்தை நிரப்பினார்.
இதனைத் தொடர்ந்து கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக கோலிவுட்டில் அசுர வளர்ச்சி கண்ட அனிருத் இசையையும் மிஞ்சும் அளவுக்கு பிசியான இசை அமைப்பாளராக ஜிவி பிரகாஷ் மாறி உள்ளார். தமிழ் சினிமாவில் இவர்கள் கலக்கி வருவதைப் போல மற்ற மொழிகளிலும் பிரபலமான பாடகர்கள் கலக்கிக் கொண்டிருக்கின்றன. இப்படியான நிலையில் ஒரு பாட்டு பாட அதிக சம்பளம் வாங்கும் ஐந்து பாடகர்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
![]()
சோனு நிகம்:
தென்னிந்திய சினிமாவில் பிரபல பாடகராக திகழும் சோனு நிகம் ஒரு பாடலுக்கு சுமார் 15 லட்சம் ரூபாயிலிருந்து 80 லட்சம் ரூபாய் வரை சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. இவர்தான் இந்த பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளார்.

அர்ஜித் சிங்:
அடுத்ததாக அர்ஜித் சிங் நாட்டின் மிகவும் பிரபலமான முன்னணி பாடகர்களில் ஒருவராக உள்ளார். ஒரு பாடலுக்கு இவர் 18 லட்சம் ரூபாயிலிருந்து 20 லட்சம் ரூபாய் வரை சம்பளம் வசூலிக்கும் நிலையில் நான்காவது இடத்தை பிடித்துள்ளார்.

சுனிதி சௌஹான்:
இவர் அதிக விளம்பரத்தில் இல்லாவிட்டாலும் பாடல்களுக்கு பெரிய தொகையை பெற்று வருகின்றார். அதன்படி ஒரு பாடலுக்கு 18 லட்சம் ரூபாயில் இருந்து 20 லட்சம் ரூபாய் வரை சம்பளம் பெறுவதாக கூறப்படுகின்றது.
/indian-express-tamil/media/media_files/FavU8ZJeKTNErPOxF7AS.jpg)
ஸ்ரேயா கோஷல்;
பிரபல பாடகியான ஸ்ரேயா கோஷல் நாட்டின் இரண்டாவது அதிக சம்பளம் வாங்கும் பாடகையாக உள்ளார். அதன்படி இவர் ஒரு பாடலுக்கு 25 லட்சம் ரூபாய் வரை சம்பளம் பெற்று வருவதாக கூறப்படுகிறது.

ஏ ஆர் ரகுமான்:
ஆஸ்கார் நாயகன் ஏ ஆர் ரகுமான் இடத்தை அடித்துக் கொள்ள ஆளே கிடையாது. இவர்தான் நாட்டின் மிகவும் அதிக சம்பளம் வாங்கக்கூடிய பாடகர்களின் முதல் இடத்தை பிடித்துள்ளார். அதன்படி இவர் ஒரு பாடலுக்கு மூன்று கோடி ரூபாய் வரை சம்பளம் பெற்று வருவதாக கூறப்படுகிறது.
