குழந்தை பேச்சால் ரசிகர்களை கவர்ந்த ஜெனிலியா… வைரலாகும் வீடியோ உள்ளே….

By Begam

Published on:

இயக்குனர் சங்கர் இயக்கத்தில் வெளியான’ பாய்ஸ்’ திரைப்படத்தில் நடித்து புகழ்பெற்றவர் நடிகை ஜெனிலியா தேஷ் முக்.  ‘பாய்ஸ்’ படம் என்றாலே ஜெனிலியாவின் முகம் தான் நம் அனைவருக்கும் ஞாபகம் வரும். இந்த படத்தைத் தொடர்ந்து ஜெனிலியாவுக்கு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருந்தது.

   

முன்னணி நடிகர்களான விஜய், ஜெயம் ரவி,தனுஷ் போன்றோருடன் நடித்து பிரபலமானார். சச்சின், சந்தோஷ் சுப்பிரமணியம், உத்தமபுத்திரன் போன்ற வெற்றி  படங்களின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். இவர் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே  கொண்டுள்ளார்.

பிரபல பாலிவுட் நடிகர் ரிதேஷ் தேஷ் முக்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ரியான், ராஹில் என்று இரு மகன்கள் உள்ளனர். தற்பொழுது குடும்ப வாழ்க்கையை சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்.சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்ட்டிவாக இருக்க கூடியவர். தற்பொழுது அவர் மிக அழகாக பேசும் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Genelia Deshmukh (@geneliad)

author avatar