Connect with us

அந்தப் பிரபல நடிகர் என்ன லவ் பண்றேன்னு சொல்லி ஏமாத்திட்டாரு.. நேரலையில் ஒரே போடாக போட்ட ‘ஜெமினி’ பட நடிகை கிரண்..

CINEMA

அந்தப் பிரபல நடிகர் என்ன லவ் பண்றேன்னு சொல்லி ஏமாத்திட்டாரு.. நேரலையில் ஒரே போடாக போட்ட ‘ஜெமினி’ பட நடிகை கிரண்..

 

ஜெமினி, தென்னவன், வின்னர், அன்பை சிவம் போன்ற பல படங்களில் நடித்து 2000 காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் கிரண் ரத்தோட். 90கள் மற்றும் 2000 கால கட்டத்தில் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகி பல படங்களில் முன்னணி கதாநாயகி வலம் வந்து இளைஞர்கள் மனதில் கொடி கட்டி பறந்த இவரும் ஒருவர்.

அந்த காலகட்டத்தில் இவர் நடிக்காத பிரபல ஹீரோக்கள் கிடையாது, கமல்ஹாசன், அஜித், விக்ரம், ஆக்சன் கிங் அர்ஜுன், விஜயகாந்த் போன்ற பல முன்னணி கதாநாயகர்களுடன் பணிபுரிந்து பல மெகா பஸ்டர் படங்களை கொடுத்திருக்கிறார். அதன் பின்னதாக இவர் துணை கதாநாயகியாகவும், தற்போது காலகட்டத்தில் சப்போட்டிங் ரோலில் நடித்து வளம் வந்து கொண்டிருக்கிறார்.

   

உதாரணத்திற்கு ஆம்பள, இளமை ஊஞ்சல், நியூ போன்ற பல படங்களில் நடித்து வருகிறார். தற்போது இவர் ஷகிலா அவர்கள் நடத்தும் இன்டர்வியூவில் சில விஷயங்களை மனம் திறந்து பேசி வெளியிட்டு இருந்தார். 2000 காலகட்டத்தில் இவருடன் நடித்து பிரபலமான ஒரு நடிகர் தன்னை காதலித்து ஏமாற்றி விட்டதாக தெரிவித்திருக்கிறார். அதாவது கிரண் ரத்தூர் அவர்களிடம் ரசிகர் ஒருவர் கேட்கப்பட்ட கேள்வி உங்களை ஒருவர் காதலிக்கிறேன் என்று ஏமாற்றி உள்ளார்,

அது உண்மையா என்று கேட்டதற்கு? ஆமாம் ஒரு பிரபல நடிகர் என்னை காதலித்து ஏமாற்றி விட்டார், ஆனால் அவர் பெயரை தற்போது கூற முடியாது, கூறினால் மிகப்பெரிய சர்ச்சை ஆகிடும், அதனால சொல்ல மாட்டேன். ஆனால் அவர் மட்டும் என்னை லவ் பண்ணல எல்லாரும் தான் பண்ணாங்க ஏன்னா நான் அழகான பொண்ணு அதான் என்ன எல்லாரும் லவ் பண்றாங்க, என்று நகைச்சுவையாக பேசி அந்த விஷயத்தை பெருசாக சர்ச்சையாக்காமல் முடித்து விட்டார்.

author avatar
Ranjith Kumar
Continue Reading
To Top