தமிழ் சினிமாவில் எம்ஜிஆர், சிவாஜி ஆகியோர் கோலோச்சிய காலத்தில் சைலண்ட்டாக தனக்கென ஒரு பாதையை உருவாக்கி மூன்றாம் இடத்தைப் பிடித்தவர் ஜெமினி கணேசன்.. தன்னுடன் நடித்த நடிகையான சாவித்ரியை மூன்றாவது மனைவியாக திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு ஒரு மகன் பிறந்தான். சினிமாவில் இருவரும் பிஸியான நடிகராக வலம் வந்தார்கள்.
ஒரு கட்டத்தில் ஜெமினி கணேசனின் மார்க்கெட்டே டல்லடித்த போதும் புகழின் உச்சியில் இருந்தார் சாவித்ரி. ஆனால் இவரின் கடைசி காலத்தில் கடனில் சிக்கி கஷ்டப்பட்டு உயிரிழந்தார். முதன்முதலில் கார் வாங்கிய ஹீரோயின், வீட்டில் நீச்சல் குளம் வைத்து கட்டிய நடிகை என்று திரையுலகை திரும்பி பார்க்க வைத்த சாவித்ரி படத் தயாரிப்பு மற்றும் இயக்கம் என அகலக்கால் வைத்து கையை சுட்டுக்கொண்டார்.
சாவித்ரியின் இந்த முயற்சிகளால் அவருக்கும் அவரது காதல் கணவரான ஜெமினி கணேசனுக்கும் இடையில் கருத்து வேறுபாடு எழுந்து இருவரும் தனித்தனியே வசிக்க ஆரம்பித்தனர். அப்போது கடுமையான மன உளைச்சலில் இருந்த சாவித்ரி குடிப்பழக்கத்துக்கு ஆளானார். சாவித்ரியின் இந்த நிலைமை ஜெமினி கனேசனுக்கும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.
அவரை பார்க்க செல்ல வேண்டாம் என மற்ற மனைவிகள் அவரைத் தடுத்துள்ளனர். ஒரு கட்டத்தில் அவர் எங்கும் செல்லக் கூடாது என வீட்டிலேயே அவரை அடைத்து வைத்துவிட்டார்களாம். இதை நடிகர் சந்திரபாபுவின் தம்பியான ஜவஹர் ஒரு நேர்காணலில் பகிர்ந்துள்ளார்.
அதில் ‘எனக்கு ஜெமினி அண்ணனின் மகள் கமலா நெருங்கிய நண்பர். அவரைப் பார்க்க சென்ற போதுதான் ஜெமினி என்னிடம் ‘என்னை வீட்டிலேயே அடைத்து ஹவுஸ் அரஸ்ட் பண்ணிட்டாங்க. எனக்கு விஸ்கியும், சிக்கன் 65 –ம் வாங்கிட்டு வாடா’ எனக் கெஞ்சினார். நானும் அவரோடு பழகிய நட்புக்காக அதையெல்லாம் வாங்கிக் கொடுத்தேன்.” எனக் கூறியுள்ளார். இந்த தகவல் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.