“அவங்களை சும்மா விடாதீங்க”… ஜெம் வீரமணி வழக்கில் முதலமைச்சர் விஜய்க்கு சம்மன்…. களத்தில் இறங்கிய திமுக…. அரசியலில் உச்சகட்ட பரபரப்பு….!

By Nanthini on புரட்டாதி 28, 2026

Spread the love

பிரபல தொழிலதிபர் ஜெம் வீரமணி தொடர்புடைய சிறுமிகள் பாலியல் வன்கொடுமை வழக்கு தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இவ்வழக்கில் சிறப்பு விசாரணைக்குழு விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது. குற்றச்சாட்டுக்கு உள்ளான ஜெம் வீரமணி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும் அவருக்கு உடந்தையாக செயல்பட்டதாக சாந்தி, அவரது கணவர் மகேந்திர சிம்மன் மற்றும் வீரமணியின் உதவியாளர் கணேசன் ஆகியோரும் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ள நிலையில், சாந்தி மற்றும் மகேந்திர சிம்மனை காவலில் எடுத்து காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், ஜெம் வீரமணி வழக்கில் புதிய திருப்பமாக திமுக சார்பில் சிறப்பு விசாரணைக்குழுவிடம் பரபரப்பான புகார் மனு ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. திமுக பொருளாளர் டி.ஆர். பாலு அளித்துள்ள அந்த புகார் மனுவில், முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களுக்கு சம்மன் அனுப்பி அவர்களிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

   

மேலும், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே பொய் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவதாகவும், ஆதாரமற்ற மற்றும் தவறான குற்றச்சாட்டுகளை பரப்புவோர் மீது சட்டப்படி வழக்குப்பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த புகார் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.தமிழக அரசால் அமைக்கப்பட்டுள்ள இந்த சிறப்பு புலனாய்வுக்குழு, வழக்கு தொடர்பான அனைத்து கோணங்களிலும் விசாரணையை முடுக்கிவிட்டுள்ள சூழலில், திமுக அளித்துள்ள இந்த புகார் மனு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும் காரசாரமான விவாதங்களையும் ஏற்படுத்தியுள்ளது.